5/15/14

ஈரமுள்ள மனிதர்கள்

                                                         ஈரமுள்ள மனிதர்கள்

காலை அலுவலகம் செல்லும் பரபரப்பு ,தினமும் நான் தாண்டிச் செல்லும் பேருந்து நிலையத்தைத் தாண்டி செல்லுகையில் என் கண்கள் ஒரு  நிமிடம் திரும்பிப்  பார்த்தது,கை ,கால்கள்உடைந்து கட்டு போடப்பட்ட நிலையில் மெலிந்த ஒரு பெண்மணி முக்காடிட்டு ,உடலை குறுக்கி படுத்திருந்தார்.மணியை பார்த்தேன் எட்டாகியிருந்தது அந்த பெண்ணும் கண்களை மூடியிருந்தார்  ,தாமதமாக போய் இடிபட்டு பேருந்தில் நிற்கும் அவஸ்தை  மனதின் முன் நிழலாட கால்கள்  வேகமாக நடை போட்டன என் பேருந்து நிறுத்தத்திற்கு.அலுவலகத்தில் வேலை ஓடவில்லை,
நேரத்தை கடிந்து கொண்டேன் ஐந்து ஆகவில்லை என ,அவசரமாக பேருந்தைப் பிடித்து இறங்கி வந்தேன் அவள் படுத்திருந்த நிறுத்தத்திற்கு,
கை நகர்த்த முடியாததால் கலைந்த உடைகளைக் கூட சீராக்கமுடியாமல் இடிந்து போய்  அமர்ந்திருந்தார் அந்த பெண்,அந்த நிமிடம் மூளை  ஆடம்பரம்,அழுக்கு,மணம் எதையும் சிந்திக்காமல் உதவ மட்டுமே உந்தியது,அவர் உடைகளை சீராக்கி விட்டு  பேச முற்பட்டேன்,கலங்கிய அந்த கண்களால் பார்த்துக் கொண்டே இருந்தார்,அவர் பேசிய ஒன்றிரண்டு வார்த்தையும் காற்றோடு போயிற்று என் காதிற்கு கேட்கும் முன்....சைகையால் கேட்டேன் சாப்பிட  வேண்டுமா? என ,ஆம் என்பது போல் தலையசைத்தாள் இருந்த சக்தியெல்லாம் பயன்படுத்தி ,உடனே அருகில் இருந்த உணவகத்திற்கு புறப்பட்டேன்... பாத்து அடி நகர்ந்ததும் எதிரே நடுத்தர வயதுடைய ஒருவர் வந்துக் கொண்டிருந்தார்அவரை தாண்ட முற்படுகையில் மிகவும் நன்றிமா,.... என்றார் கனிவான குரலில், ஆச்சர்யம் கலந்த கண்களால் அவரை பார்த்து கொண்டே திரும்பினேன்... நல்ல காரியம் பண்ண என்னால் இததான் வாங்க முடியும் நீ செய்ததை  பண்ண முடியாதம்மா...  என்றார் உணவையும் ,பழச் சாரையும் கையில் வைத்துக் கொண்டு.நானும் நன்றி கலந்த மெல்லிய புன்னகையுடன் கேட்டேன் அந்த பெண் பேசினாரா ?என ,ஆமாம் இந்தியில் பேசினார் ஒன்றிரண்டு வார்த்தைகள் என்றார்.இப்போது  என்ன  செய்வது எதாவது தன்னார்வ தொண்டு நிறுவனத்தை  கூப்பிடலாமா?  என்றேன்  ,அங்க பாரும்மா என அவர் சுட்டி காட்டிய திசையில் 3 காவலர்கள் நின்றுக் கொண்டிருந்தனர் ,நான் இவர்களிடம் கூறினேன்...  இப்போது அநாதை இல்ல உழியர்கள்  வந்து அழைத்துச்  சென்று விடுவார்கள் என்றார்.அவர் மீதான மதிப்பு பெருகியது.நான் யோசித்துக் கொண்டிருக்கையிலே அவர் கூறினார் நன் அவர்கள் அழைத்துப் போகும் வரை இங்குதான் இருப்பேன் நீ போம்மா ...இருட்டுகிறது என்றார்.மிக்க நன்றியுணர்ச்சியோடு  அவரிடம் நன்றி சொல்லிப்  புறப்பட்டேன்.ஈரமுள்ள மனிதர்களும் இந்த உலகில் இருந்துக் கொண்டுதான் உள்ளார்கள் என எண்ணி கொண்டேன்.அதன் பிறகு தினமும்  அலுவலகம் போகும்போதெல்லாம் அந்தக் காட்சி என் கண்முன்னே வந்து போனது.


No comments:

Post a Comment