கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ?.....
ஆண்டவன் படைத்த உலகமடா -இதில்
ஆயிரம் உயிர்களும் உலவுதடா....
உறவுகள்,நண்பர்கள்,படை சூழ-நித்தமும்
இதில் சுழல்கிறோம் ஆறு போல!
நாட்கள் நமக்காய் ஒதுக்கப்பட்டது !
உனக்கென உள்ளது இன்று !
நாளை உண்டா என
நாளை மட்டுமே சொல்லும்!!!
இருக்கும் இன்றில்
இன்சொல் பழகு !!!
கயவனாய் காட்டிவிடும் -
கடுஞ்சொற்கள் நம்மை !
முடிந்தவரை முயல்கிறேன் எனக் கூறு -
முடியாதென்று சொல்லும் முன் !
இருப்பதில் கொடுக்க இயலுமா?
என முயல் .....
இயலாது எனக் கூறும் முன்!
இன்னல்கள் வருகையில்
இருக்கிறோம் என
ஈராயிரம் கைகள் உனக்காய் !
ஏனெனில்,
நாம் கொடுப்பதையே
உலகம் திருப்பித் தரும்!!!
உறவுகளோடு இணைவோம்-
உலகத்தோடு பிணைவோம் !
நண்பர்களை கூட்டுவோம் -
நாமாய் வாழ்வோம் !இங்கே
நம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்
நமது அடுத்த தலைமுறை !
நாளை நல்லவர்களை
இன்று உருவாக்குவோம் !
பிடித்ததை செய்வோம் -
இருப்பதை பகிர்வோம் !
இன்சொற்கள் பழகுவோம்
இன்னல்களைத் தவிர்ப்போம் !
இருக்கும் நாட்களில்
இனிமையாய் பழகுவோம் !
இணக்கமான இனத்தை
படைப்போம் !
ஆண்டவன் படைத்த உலகமடா -இதில்
ஆயிரம் உயிர்களும் உலவுதடா....
உறவுகள்,நண்பர்கள்,படை சூழ-நித்தமும்
இதில் சுழல்கிறோம் ஆறு போல!
நாட்கள் நமக்காய் ஒதுக்கப்பட்டது !
உனக்கென உள்ளது இன்று !
நாளை உண்டா என
நாளை மட்டுமே சொல்லும்!!!
இருக்கும் இன்றில்
இன்சொல் பழகு !!!
கயவனாய் காட்டிவிடும் -
கடுஞ்சொற்கள் நம்மை !
முடிந்தவரை முயல்கிறேன் எனக் கூறு -
முடியாதென்று சொல்லும் முன் !
இருப்பதில் கொடுக்க இயலுமா?
என முயல் .....
இயலாது எனக் கூறும் முன்!
இன்னல்கள் வருகையில்
இருக்கிறோம் என
ஈராயிரம் கைகள் உனக்காய் !
ஏனெனில்,
நாம் கொடுப்பதையே
உலகம் திருப்பித் தரும்!!!
உறவுகளோடு இணைவோம்-
உலகத்தோடு பிணைவோம் !
நண்பர்களை கூட்டுவோம் -
நாமாய் வாழ்வோம் !இங்கே
நம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்
நமது அடுத்த தலைமுறை !
நாளை நல்லவர்களை
இன்று உருவாக்குவோம் !
பிடித்ததை செய்வோம் -
இருப்பதை பகிர்வோம் !
இன்சொற்கள் பழகுவோம்
இன்னல்களைத் தவிர்ப்போம் !
இருக்கும் நாட்களில்
இனிமையாய் பழகுவோம் !
இணக்கமான இனத்தை
படைப்போம் !