1/8/19

                                            கனியிருப்பக்  காய்கவர்ந் தற்று ?.....


 ஆண்டவன் படைத்த உலகமடா -இதில்
 ஆயிரம் உயிர்களும் உலவுதடா....
உறவுகள்,நண்பர்கள்,படை சூழ-நித்தமும்
இதில் சுழல்கிறோம் ஆறு போல!

நாட்கள் நமக்காய் ஒதுக்கப்பட்டது !
உனக்கென உள்ளது இன்று !
நாளை உண்டா என
நாளை மட்டுமே சொல்லும்!!!

இருக்கும் இன்றில்
இன்சொல் பழகு !!!
கயவனாய் காட்டிவிடும் -
கடுஞ்சொற்கள் நம்மை !

முடிந்தவரை முயல்கிறேன் எனக் கூறு -
முடியாதென்று சொல்லும் முன் !
இருப்பதில் கொடுக்க இயலுமா?
என முயல் .....
இயலாது எனக் கூறும் முன்!


இன்னல்கள் வருகையில்
இருக்கிறோம் என
ஈராயிரம் கைகள் உனக்காய் !
ஏனெனில்,
நாம் கொடுப்பதையே
உலகம் திருப்பித்  தரும்!!!

உறவுகளோடு இணைவோம்-
உலகத்தோடு பிணைவோம் !
நண்பர்களை  கூட்டுவோம் -
நாமாய் வாழ்வோம் !இங்கே
நம்மை உற்றுப்  பார்த்துக்  கொண்டிருக்கும்
நமது அடுத்த தலைமுறை !
நாளை நல்லவர்களை
இன்று  உருவாக்குவோம் !

பிடித்ததை செய்வோம் -
இருப்பதை  பகிர்வோம் !
இன்சொற்கள் பழகுவோம்
இன்னல்களைத்  தவிர்ப்போம் !
இருக்கும் நாட்களில்
இனிமையாய் பழகுவோம் !
இணக்கமான இனத்தை
படைப்போம் !
















No comments:

Post a Comment