அப்பப்பா என்ன வெய்யில் என அலுத்துக்கொண்டே வந்து நாற்காலியில் அமர்ந்தார் திருநாவு ,ரெண்டு நாளா ஒரே மழை,எல்லாத்துக்கும் சேத்து இன்னிக்கு வெயில் மண்டைய பிளக்குது எனக் கூறிக்கொண்டே தொலைகாட்சி பெட்டியை
இயங்க செய்தார் ,அன்னா ஹசாரே அவர்களின் உண்ணாவிரதத்தைப் பற்றிய
செய்தி ஒளிபரப்பானது ,மனதையும் மீறி வாய் வரை வந்த சிரிப்பை அடக்க வேண்டாம் என சத்தமாக சிரித்தே வைத்தார் .
தொலைபேசி மணி ஒலித்தது தாமரை ஓடி வந்து வந்து எடுத்தார் ,அப்பாவா?வேற என்ன செய்வார் வீட்டுகுள்ள வந்தவுடன் செய்தி பார்க்கிறார் என புலம்பல் ஆரம்பித்தவுடனே பேசுவது எனது அருமை மகள் என்று முடிவு செய்தேன் ,குடு இப்பிடி என தொலைபேசியை வாங்கி என்னம்மா ?மாப்ள வேலைக்கு போயாச்சா?பாப்பா எங்க கூப்பிடு என்றார் ,அது இருக்கட்டும்பா உங்க ரெண்டு பேருக்கும் பாஸ்போர்ட்டுக்கு விசாரிக்க சொன்னேனே என்ன ஆச்சு என்ற மகளிடம் அது விசயமாதான்மா கொஞ்சம் சான்றிதழ் எல்லாம் தேவ பட்டுச்சு அதான் நம்ம ஊருக்கு போய்ட்டு வந்து உள்ள நுழையறேன் என்றார்,
என்ன ஆச்சு என்ற மகளிடம் வெகு சுவாரசியமாக கதை சொல்ல ஆரம்பித்தார் திருநாவு,நான் சான்றிதழுக்காக அணுக வேண்டிய அரசாங்க அலுவலகத்திற்கு ,முன்பு எத்தனையோ முறை சென்று இருக்கிறேன் ,எனவே சட்டை பையில் பணம் இருக்கிறதா ?என தடவி பார்த்துக் கொண்டேன் ,பக்கத்துக்கு கடையில் இப்ப இருக்க அய்யா எப்பிடிப்பா? என்றேன் .கடைக்காரர், ரொம்ம்ம்ப கை சுத்தாங்க ,காச கையால தொடவே மாட்டாரு அதனால இந்தாங்க என 1 காகித உறையை நீட்டினார் , இதுல போட்டுக்கங்க என கூறி சிரித்தார் ,மேலும் உறை இரண்டு ரூபாய் என்றார்,நல்ல வியாபாரம் என்று கூறிக் கொண்டே மனதில் ஒரு முடிவுக்கு வந்தவனாய் இல்லப்பா அதுக்கு அவசியம் இருக்காது என்ற என்னிடம் போற வேலை நல்லபடியாக முடிஞ்சுருங்க என வினயமாக கூறினார் கடைக்காரர்.

உள்ளே நுழைந்து நான் ஒரு ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர் என அறிமுகபடுத்திக் கொண்டேன்,உடகாருங்க என்ன வேலையா வந்தீங்க என்றவரிடம் எனக்கு தேவையான விவரத்தைக் கூறினேன் ,ரொம்ப பழைய
காகிதங்க தேடணும் திங்கள் கிழமை வாங்க உங்களுது இருக்கானு பாத்து
வைக்கறேன் என்றார்.கொஞ்சம் தண்ணி கிடைக்குங்களா? என்ற என்னை
இருங்க என்று சொல்லிவிட்டு உதவியாளரை அழைத்தார் .
பாருங்க நம்ம அன்னா ஹசரே எப்படி ஒரு அகிம்சை புரட்சி பண்றாரு ஊழலுக்கெதிரா என்ற என்னை வித்தியாசமாக பார்த்து விட்டு ,
இதெல்லாம் தேவையில்லாத வேலைங்க இவரால மட்டும் இதெல்லாம் ஒழிக்க முடியுமா?காசில்லாம கல்ல கூட நகத்த முடியாதுங்க
இதெல்லாம் தேவையில்லாத வேலைங்க இவரால மட்டும் இதெல்லாம் ஒழிக்க முடியுமா?காசில்லாம கல்ல கூட நகத்த முடியாதுங்க
இந்த காலத்துல , உங்களுக்கு நான் சொல்லனுன்னு இல்ல என்றார் என் முகத்தை ஊடுருவியவாறே .
இப்படியெல்லாம் நாம நினைக்கிற நாலதாங்க லஞ்சம் ஒழியல,
இந்த போராட்டத்த பத்தின விழிப்புணர்வு குறிப்பா நம்ம தமிழ்நாட்ல குறைவா இருக்கு ,அதுக்காகத்தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியரெல்லாம்
சேர்ந்து ஒரு பேரணி போறோம் ,இன்னிக்கு மாலை 6 மணிக்கு நம்ம
பெரிய கோவில்ல தொடங்குறோம் ,நீங்களும் வந்தா நல்லா இருக்கும் என்றேன்.
ஏன் சார் இந்த வீண் வேலையெல்லாம்? இந்த போராட்டமெல்லாம் சும்மா
சார் மிஞ்சி போனா ஒரு பத்து நாள் நடக்கும் அதுக்கு மேலல்லாம் நம்ம
அரசாங்கம் விடாது சார்.தண்ணி குடிச்சுட்டு கிளம்புங்க என்றவரிடம் எப்பிடியும் திங்கள் கிழமை இந்த ஊர்லதான் போராட்டம் இருக்கும் மறக்காம எடுத்து வைங்க சார் வாங்கிக்கறேன் என்ற என்னை
மனிதர் வெறுப்பாக பார்த்து விட்டு குனிந்துக் கொண்டார் .
வந்தது திங்கள் கிழமை அலுவலகத்துக்கு வெளியே உள்ள கடைக்கு சென்று ஒரு காகித உறை எனக் கேட்டேன் என்னை இளக்காரமாக பார்த்த கடைக்காரர் எத்தனை மக்களை பார்த்திருப்போம் உங்கள மாதிரி என்றார்,
நான் சிரித்துக் கொண்டே அலுவலகத்திற்குள் நுழைந்தேன்.வணக்கம் சார் செய்தி படிச்சுருபிங்கனு நினைக்றேன் என்றேன், மேசையில் உள்ள செய்தித் தாளை பார்த்துக் கொண்டே,அதனாலதான் இன்னிக்கு பேரணிக்குக் கூட அவசியமில்லாம போய்ட்டு என்றேன்.மனிதர் நான் கூறுவது எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை சற்று இருங்கள் என கூறிவிட்டு தயாராக வைத்திருந்த காகித்தை என்னிடம் நீட்டி கிளம்புங்க என்பது போல பார்த்தார்,

நான் மனதிற்குள் அன்னா ஹசாரேக்கு நன்றி கூறிக் கொண்டே கடையில் வாங்கின காகித உறையை அவரிடம் நீட்டினேன் என்னை ஆச்சர்யத்துடன் பார்த்த மனிதர் உறையைப் பிரித்ததும் எதோ சொல்ல வாய் எடுத்தார் ,அதற்குள் நான் முந்திக் கொண்டு எவ்ள பெரிய விசயங்க ,உண்ணாவிரதம் வெற்றி பெற்றதுக்கு அடையாளமா ஐநூறு பேருக்கு அன்னதானம் பண்றது நம்ம மக்களுக்கு இதெல்லாம் புரியுமா ?உங்கள மாதிரி
நல்ல மனசோட நிறைய குடுக்க முன் வர மாட்டாங்க என்றேன் ,மனிதர் நூறு ரூபாய் நோட்டை உள்ளே வைத்து பெரிய கும்பிடாக போட்டு என்னை அனுப்பி வைத்தார்.
இப்பதாம்மா உள்ள வர்றேன் ,வந்தவுடன் அன்னா ஹசாரே பத்தி செய்திய பார்த்தவுடன் அந்த அலுவலர் முகம் தான் நியாபகம் வந்தது அதான் சிரிச்சுகிட்டிருந்தேன் நீயும் கூப்பிட்ட ,அடுத்த வேலை அன்னதானம்மா அதுக்கு ஏற்பாடு பண்ண கிளம்பனும்மா, நீ அம்மாட்ட பேசு என்ற அப்பாவை நினைத்து ஒரு நிமிடம் உள்ளம் பூரிக்காமல் இருக்கமுடியவில்லை ,அதே சமயம் இதெல்லாம் நடந்தது அன்னா ஹசாரே என்ற மனிதனின் போராட்டத்தால் என எண்ணுகையில் அவருக்கு நம் மக்கள் எல்லோரும் செய்ய வேண்டிய நன்றிக்கடன் ஊழலை ஒழிக்க நம்மால் முயன்ற வரை லஞ்சம் கொடுக்காமலும் ,வாங்காமலும் நடைமுறை வாழ்க்கையில் நடந்துக் கொள்வதுதான் .
No comments:
Post a Comment