உதிரும் மலரிதழ்கள்
அது என்னுடைய முதுகலை படிப்பின் கடைசி ஆண்டு , ஒரு சனிக்கிழமை காலை தொலைபேசி மணி அடித்தது என் பள்ளி தோழி கிருத்திகா தான் பேசினாள்,நேற்று இரவுதான் தான் கல்லூரியிலிருந்து வந்தேன் ,உனக்கு நேரம் கிடைத்தால் மாலை சந்திக்கலாமா ,நீ வருகிறாயா? நான் வரட்டுமா ? என்றாள்.இல்லை நானே வருகிறேன் எனக்கும் அந்த பக்கம் தான் கடைக்கு போகும் வேலை உள்ளது ,என்று கூறினேன்.அவள் மருத்துவக் கல்லூரியிலிருந்து விடுமுறைக்கு எப்பொழுது தஞ்சாவூர் வந்தாலும் நாங்கள் சந்திப்பது வழக்கம்.
மாலை என் இரு சக்கர வாகனத்தை அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்திக் கொண்டிருக்கும் போதே அவளுக்கு நல்ல அர்ச்சனை விழுவது தெரிந்தது .நான் உள்ளே சென்றதும் அவளுடைய அம்மாதான் பேசினார் ,வாம்மா உன் தோழிக்கு நல்ல வார்த்தையா சொல்லு... நம்ம சொன்னா எங்க கேக்குறா ?என பொரிந்து தள்ளி விட்டார்.
இருவரும் மாடிக்கு போய் பேச ஆரம்பித்தோம் .ஒண்ணுமில்லடி மருத்துவ படிப்பில் இப்பொழுது எங்களுக்கு பயிற்சிக் காலம்
எனவே போன வாரம் மூன்று நாள் "எய்ட்ஸ் " நோயால் பாதிக்கப்பட்ட
நோயாளிகளுக்கான முகாம் நடந்தது ,அதற்கு எங்கள் குழுவும் சென்றோம்.
நான் கூடுதலாக இரண்டு நாள் இருந்து அவர்களுக்கு சேவை செய்துவிட்டு வந்தேன் அதான் வீட்டில் ஒரே பூகம்பம் என்றாள்.
எனக்கு அவளை பார்க்க பெருமையாக இருந்தது , அம்மாக்கு அந்த நோயை பற்றி முழுவதும் தெரியாது ,அதனால் தான் பயப்படுகிறார் , நீ எடுத்து கூறு என கூறிக் கொண்டிருக்கும் போதே அவள் பேச ஆரம்பித்தாள், ஆமாம் போ ,அம்மாக்குத்தான் தெரியாது பயப்படறாங்க ,கூட இருக்க பயிற்சி மருத்துவர்களும் ரத்த பரிசோதனை செய்ய நீ போ ,நான் போ என ஒரே பயம், அனைத்து கையுறை ,முன்னெச்சரிக்கை உபகரணத்துடன் தான் இத்தனைக்கும் செல்கிறோம் ,என்ன செய்வது மக்கள் மனதில் இந்த கொடிய வியாதியை பற்றிய விழிப்புணர்வை கொண்டுவர வேண்டும் அதுதான் இதற்கு ஒரே வழி என்றாள் .
அந்த நோயாளிகளின் மேலிருந்த அக்கறையும் , ஒருவித பரிதாப உணர்வும் அவர்களை பற்றி மேலும் கேட்க என்னைத் தூண்டியது , அவள் கூறிய இரண்டு சம்பவம் என் மனதைக் கரைத்தது .நான் பரிசோதனை செய்த ஒரு பெண் கருவுற்றிருப்பதை கண்டறிந்த பின் அந்த பெண்ணை கூப்பிட்டு என்னம்மா இது அந்த குழந்த என்ன பாவம் செய்தது ,இருவருக்கும் நோய் தாக்குதலை வச்சுகிட்டு குழந்தை கேட்குறீங்களே நியாயமா ?என கேட்டால் அவளிடமும் பதில் இல்லை தலையை குனிந்து கொண்டார், என தோழி கூறியதை கேட்கவே வருத்தமாக இருந்தது.மேலும் , நோய் பாதிக்கபட்டு இருந்த பெண்களுக்கான மகப்பேறு அறைகளுக்கு சென்றோம் ,அபோழுதுதான் பூத்த புது ரோஜா மலர் போல அத்தனை அழகான ஒரு குழந்தை ,நான் மனம் நிறைய பயத்துடனே பெரிய மருத்துவரைக் கேட்டேன் இந்த குழந்தைக்கு ?" ஆமாம் நோய் இருக்கிறது " என்றார் ,அவ்வளவுதான் அந்த பிஞ்சுக் குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பை என்னால் எதிர் கொள்ளவே முடியவில்லை என்றாள் ,மேலும் அது என்னை பார்த்து நான் என்ன தீங்கு செய்தேன்? என கேட்பது போலவே தோன்றியது என அவள் கூற கூற எனக்கு கண்ணீர் பெருகிவிட்டது!
இன்றும் டிசம்பர் ஒன்றாம் நாள் "உலக எய்ட்ஸ் நாள் " வந்தால் அந்த நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியவில்லை.நம் மக்கள் அனைவரும் அந்த நோயினைப் பற்றிய விழிப்புணர்வு பெறுவதே இதைப் போல வாசமில்லா மலர்களின் உதிர்வை தடுப்பதற்கான ஒரே வழி என எண்ணிக் கொள்வேன்.

No comments:
Post a Comment