2/8/19

வெண் பனி

                                    வெண் பனி (மழலை உள்ளம் போல்)



விழி திறந்தக்  காலை
வேடிக்கைப் பார்க்கும் மேகக் கூட்டம் 
எட்டிப் பார்க்கும்  சூரியன் 
விட்டுப்  பிரிய மனம் வரா மதி நிலவு!
மேக ஆடை விலகிச் செல்ல 
நாணிச் சிவந்த வானமகள் !
பனிக்கு ஏங்கி நிற்கும் 
சின்னஞ்சிறு மழலை !
பள்ளிக்கு செல்லும் முன் 
பனிமழை பெய்கிறதா  எனப்  பார்க்கும் 
பாசங்கில்லா பைங்கிளி !
நேரமும் நகர்ந்தது 
மேகமும் வெண்மலர்த் தூவ 
பூமியவள் வெண் பட்டை உடுத்தினாள் !
வானம் பூமி யாவுமிங்கே
 வெள்ளைக் காடு !
மனமெங்கும் மகிழ்ச்சி 
பிள்ளையவள் பூரிப்பாளே !
பூப்போல பனி எடுத்து 
பனி மனிதன் தனைப் படைத்து 
கண் ,மூக்கு , வாயிட்டு 
பொருத்தமாய் ஆடை போட்டு 
கட்டியணைத்து முத்தமிட்டு 
இத்தனையும் கனவுக் கண்டேன் -என் 
கடிகாரம் என்னைக் கடியும் வரை !-உடன் 
தொலைப்பேசி சினுங்கிடவே 
எடுத்தவுடன் பெருங்குழப்பம் 
பள்ளியின் வழியெல்லாம் 
பனி சூழ 
பயணம் வர முடியாதாம் பள்ளி பேருந்தால் !
என் கனவெல்லாம் 
கரைந்ததிங்கே பனியோடு !
பண்ணுவது என்ன என 
பயம் வந்து பல்லைக் காட்டியது !
கடிகார முள்ளும் வேகமாய் நடக்க
கண்மணி என்ன செய்வாள் ?
கனவெல்லாம் உருகி 
கண் வழியே வரக் கண்டேன் !இந்நேரம் 
அவள் வந்திருந்தால் ,
முந்நூறு முறை முத்தமிட்டு 
காது கிழிய சத்தமிட்டு 
ஆய்ந்து ஓய்ந்த பின்னாலே 
அம்மாவின் மடி தேடி ,
நினைவுகள் சுட்டதிங்கே !
வாகனத்தின் கூட்டத்திலே 
ஊர்ந்து சென்று ,நேரம் கரைத்து 
கற்கண்டை காரில் ஏற்றி 
கரை சேர்த்தார் தந்தையவர் !
பார்த்தவுடன் பாப்பா  சொன்னாள் 
பார்த்தாயா பனிப் பொழிவை ?வா 
பனி மனிதன் படைக்காலாம் !
அடியேய் !
                    ஆவி அடங்கி 
                     அங்கம் ஒடுக்கி 
                     ஆறு மணி நேரமாய் 
                     அழுதுக் கொண்டிருக்கிறேன் 
                     அங்கே என்ன ஆயிற்று 
                      நடந்ததைக் கூறு என்றேன் !
அம்மா அது கிடக்கட்டும் ! அம்மா அது கிடக்கட்டும் !
ஆனதை பற்றி பேசியென்ன ?
ஆவதை பார்ப்போம்  வா !
பனி குவியழ்க் கிடக்குதங்கே 
பனிமனிதன் தனைப்  படைப்போம் !
எட்டி நானும் பார்த்தேன் -முதல் முறை 
பயம் நிறைந்த கண்ணோடு!!!!!!!!!!!!








No comments:

Post a Comment