தனித் தமிழைத் தழைக்கச் செய்வீர்!
எல்லோரும் சௌக்கியமா இருக்கீங்களா ?உங்க வீட்ல என்ன விசேஷம் ?
என்னடா இது கட்டுரையிலே நலம் விசாரிக்கிறாங்கனு பார்க்கிறிங்களா ?எல்லாம் ஒரு காரணமாகத்தான் .....
இப்பொழுது நான் மேலே சொன்ன இரண்டு வரிகளும் தமிழ் தான் ...ஆனால் ..முழுவதும் தமிழா? என்றால்... .ஆமாம் என எவ்வளவு பேர் சொல்கின்றோம் ?இல்லை என எவ்வளவு பேர் சொல்கின்றோம் ? இல்லை என்பதே சரியான விடை ....ஆம் இந்த இரண்டு வரிகளுக்குள்ளே சௌக்கியமா,விசேஷம் என இரண்டு வேற்று மொழி வார்த்தைகள் உள்ளன ..எண்ணிப் பாருங்கள் நம் அன்றாட பேச்சு வழக்கில் எவ்வளவு தமிழ் அல்லாத வார்த்தைகள் நம்மோடு கலந்துள்ளது ..பிற மொழிச் சொற்கள் நம் மொழியோடு கலப்பது அவ்வளவு பெரிய குற்றமா என்ன ? இப்படி எத்தனை பேர் நம்மை இந்த நொடியில் கேட்டுக் கொள்கின்றோம் அவர்களுக்கெல்லாம் தான் இந்தக் கட்டுரை...
தமிழ் மொழி மிகத் தொன்மையான வரலாற்றை தம்முள் கொண்டது ,எப்பொழுது தோன்றியது என்பதையே அறுதியிட்டு கூற இயலாத அளவுக்கு செம்மொழியாக விளங்குவது ,தமிழ் அல்லாத பிற மொழிச் சொற்கள் தமிழோடு கலக்கும் போது ,நாளடைவில் நம் மொழியோடு ஒன்றாகி விடும் ,அதாவது "டைம் என்ன ?அந்த பாத்திரத்தை கிளோஸ் பண்ணி வை..." என பேச்சு வழக்கில் நம் குறிப்பிடுகின்றோம் அல்லவா ...நாம் அறியாமலே ஆங்கிலம் நமது தமிழ் வார்த்தைகளை நீக்கம் செய்து அந்த இடத்தில அமர்ந்து விட்டது,மேற்சொன்ன குறிப்பில் நான் ஆங்கிலம் பயன்படுத்தினேன் என நாம் எல்லோருக்கும் தெளிவாக தெரியும் ,ஆனால் காலப்போக்கில் நம் பிள்ளைகளுக்கு இதே ஆங்கிலம் கலந்த தமிழ் பழகிப்போய் அதற்கு இணையான தமிழ் வார்த்தையின் சுவடே தெரியாது.
அதாவது நமக்கு எவ்வாறு தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இப்பொழுது வேறுபாடு காண தெரிவதில்லேயோ அது போல ...இந்த எடுத்துக் காட்டை பாருங்கள் "ரொம்ப சந்தோசம் நாளைக்கு மீண்டும் பார்க்கலாம் "இந்த வரியில் சந்தோசம் என்னும் சொல்லை நான் பயன்படுத்தி உள்ளேன்,இதற்குத் தமிழ் அர்த்தம் மகிழ்ச்சி,ஆனால் நம்மில் எத்தனை பேர் "மிகவும் மகிழ்ச்சி நாளைக்கு மீண்டும் பார்க்கலாம்" என இன்று பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம் ?அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்...பாருங்க இப்போ என்னையும் மீறி முக்கியம்,விஷயம் என இரண்டு தமிழ் அல்லாத வார்த்தைகள் வந்து விழுகின்றன ..முக்கியம் என்றால் தமிழில் முகன்மை என்று பொருள் ,விஷயம் என்றால் செய்தி .நம் பேச்சு வழக்கு வார்த்தைகளிலேயே பெரும்பகுதி (50 சதவிகிதம் - சமஸ்கிருதம் )
தமிழ் அல்லாத அதாவது பெரும்பாலும் சமஸ்கிருதத்தை பயன்படுத்தும் நாம் நமது அடுத்தத் தலைமுறைக்குக் கற்றுத் தரும் தமிழ் எவ்வாறு சுத்தமான தமிழாக இருக்க முடியும்?
எடுத்துக்காட்டாக (உதாரணம் என்பது சமஸ்கிருதம் ) விபத்து ,தண்டனை ,மனம் ,அற்புதம், நதி ,சிந்தனை,ஆகாயம் ,பயம்,கோபம்,ஆனந்தம் ,வயது,குருதி ,பத்திரம் ,கலாச்சாரம் போன்ற பல பல சம்ஸ்கிருத வார்த்தைகள் தமிழின் மேல் அமர்ந்து பல ஆண்டு காலமாகிவிட்டது ,நம்மில் எத்தனை பேர் எனக்கு அச்சமாக உள்ளது எனச் சொல்கின்றோம்....இன்னும் தமிழில் கலந்துள்ள சமஸ்கிருத வார்த்தைகள் பட்டியலை நீங்கள் பார்த்தால் தலைச் சுற்றி கீழே விழுந்தாலும் வியப்பதற்கில்லை (ஆச்சர்யம் ,அதிசயம் -சமஸ்கிருதம்) மேலும் இதை அறிய விக்கிபீடியாவில் "தமிழில் கலந்துள்ள சம்ஸ்கிருத வார்த்தைகள் "எனத் தேடிப் பாருங்கள்.
உள்ளபடி சொல்ல வேண்டுமெனில் தமிழோடு பிற மொழிச் சொற்களை கலந்து நாம் நமது மொழியை நமக்கே தெரியாமல் அழித்துக் கொண்டிருக்கிறோம்.நாம் அன்றாடம் பயன்படுத்தும்(உபயோகம்-சமஸ்கிருதம்) தமிழ் சொற்களில் எவையெல்லாம் தமிழ் சொற்களே அல்ல என்பதைப் பார்ப்போமா?
மேற்கண்ட அட்டவணையில், ஒரே பொருளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது ,இதன் மூலம் தமிழ் மொழியின் சொல் வளத்தை அறியலாம். மேலும் நாம் செய்யும் பெரியமூடத்தனம் என்னவென்றால் என்றால் தூய தமிழ் என எண்ணிக் கொண்டு ஆசை ,ஆகாயம் ,மேகம்,கரம் போன்ற சொற்களை பயன்படுத்துவோம் , இவை தமிழ் அல்ல என்பதே நமக்கு தெரிவதில்லை அந்த அளவிற்கு பிற மொழி ஆதிக்கம் நம் மொழியில் கலந்து கிடக்கிறது.
கீழ் கண்ட வாக்கியங்களை நாம் தினமும் வீட்டில் பயன்படுத்துவோம்,இதில் சிவப்பு நிறத்தில் உள்ள சொற்கள் எல்லாம் தமிழ் அல்லாதவை ....
1.ரொம்ப தாகமா இருக்கு -தமிழில் வேட்கை
2.நேரமே சரி இல்லைப்பா -ஓரை ,நாழி
3.இன்னிக்கு என்ன தேதி -நாள்
4.தினம் தினம் இதைத் தான் சாப்பிடறேன்-நாள் ,அன்றாடம்
5.என் தேசம் என் மக்கள் -நாடு
6.கண்ணகி ஒரு பத்தினி தெய்வம் -கற்பணங்கு
7.சென்ற வருடம் இதே தேதியில் நான் இந்தியா சென்றேன்-ஆண்டு .
8.ரொம்ப புண்ணியம் ,பாக்கியம் பண்ணிருக்கேன் -பேறு
9.என்ன பிரச்சனை அவனுக்கு ?-சிக்கல்
10.கோவில் பிரசாதம் எடுத்துக்கோங்க ...-திருப்பொருள்
பழங்கால மன்னர்கள் காலத்தில் வடமொழித் தெரிந்தவர்கள் அரசில் உயர் பதவி வகித்தனர் ,அவர்கள் மூலமாக தமிழோடு கிரந்த எழுத்துக்களும் ,சமஸ்கிருதமும் தழைத்தோங்கி வளர்ந்தன ,இடைக்காலத்தில் வந்த தமிழ் இதழ்களின் எழுத்தாளர்கள் பலரும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் சேர்த்து எழுதித் தமிழைப் பாழ் படுத்திச் சென்றனர் என்பது மிகவும் துயரமான செய்தி.
கிபி 13 ஆம் நூற்றாண்டுகளிலும் ,சோழர்களின் ஆட்சிக் காலத்திலும் தமிழ் நாட்டில் வட மொழித் தாக்கம் மிகுந்து காணப்பட்டது ,அப்போது இரண்டு மொழிகளிலும் தேர்ந்த சான்றோர்கள் ,இரண்டு மொழியையும் ஒன்றாக சேர்த்து எழுதுவதை மணிப்பிரவாள நடை என அழைத்தனர் ,அதற்குப் பின் வந்த பல தமிழ் இலக்கிய நூல்களிலும் மணிப்ரவாளத்தின் தாக்கத்தை நம்மால் உணர முடியும் எ.கா: திருவாய்மொழியின் உரை .அன்றைய சேர நாட்டில், மணிப்பிரவாளத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால் சேர நாட்டுத் தமிழ், இன்று மலையாளம் என அழைக்கப்படும் புதிய மொழியாக மாறிவிட்டது.சோழர்காலத்தில் வடமொழியின் வழி புகுந்த சமயக் கருத்துருக்களும், தமிழில் எழுந்த வடமொழித் தழுவல் நூல்களும் இத்தகைய போக்குக்கு வாய்ப்பாக அமைந்தன.மேலும் நமது வழிபாட்டு முறைகள் அனைத்தும் வட மொழிக்கு மற்றம் செய்யப்பட்டும் , வடமொழி (சமஸ்கிருதம்)தெரிந்தவர்கள் உயர்குலத்தோர் அவர்களே இறைவனுக்கு வழிபாடு நடத்த தகுதியானவர்கள் எனவும் ஒரு கொள்கையைப் பரப்பி அதில் இன்றளவும் நிலையாக நிற்கின்றனர் ,நாம் நம் தமிழ்ப் பழக்கவழக்கங்களை நிறையவே மாற்றிக் கொண்டு நமது அடிச்சுவடே அழிந்த நிலையில் நிற்கின்றோம் .
என்றாவது ஒரு நாள் கோவிலுக்குள் சென்று நமக்குப் புரியாத மொழியில் இறைவனை வழிபடுகின்றோமே?நமது தமிழ் நாட்டிலே தாய்மொழியில் ஏன் பாடல்களை பாடி இறைவனை வழிபாடு செய்யவில்லை என்று எண்ணி இருக்கிறோமா ?நாமும் பத்தோடு பதினொன்றாக புரியாத ஸ்லோகத்தை உருட்டுச் (மனனம்-சமஸ்கிருதம்) செய்து இறைவன் முன் நின்று வழிபடுவதை பெருமையாக எண்ணுகின்றோம் .
சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது ,இதனை கிரந்த எழுத்துக்களைக் கொண்டே எழுதுகின்றனர் ,இந்த வடமொழி கிரந்த எழுத்துக்கள் எவ்வாறு நம் தமிழுக்குள் வந்தது என்பதைச் சுருக்கமாக இங்கே பார்க்கலாம் ,
தமிழ்ப் பண்பாட்டு தொல்லியல் ஆராய்ச்சியாளர் மு.இளங்கோவன் அவர்கள் ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளபடி "
கிரந்தம் என்பது தமிழகத்தில் வடமொழியை எழுத வழங்கிய எழுத்து ஆகும். வடமொழிக்கு முதன்முதல் எழுத்து ஏற்பட்டது தமிழ்நாட்டில் தான். அது தமிழ் ஏட்டெழுத்தினின்று திரிந்த கிரந்தவெழுத்து. அதன் காலம் தோராயமாக கி.மு 10ஆம் நூற்றாண்டு எனலாம். “கிரந்தம் என்பது நூல். வடமொழியாளர்க்குச் சொந்த வழக்கு மொழியின்மையால், நூலிற்கு மட்டும் பயன்படுத்தப் பெற்ற எழுத்தைக் கிரந்தாட்சரம் என்றனர்’ என்பர் மொழிஞாயிறு பாவாணர்.
கிபி 4 ஆம் நூற்றாண்டிலிருந்தது 13 ஆம் நூற்றாண்டு வரை கிரந்த எழுத்துக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது(தமிழ் இதையெல்லாம் விட மிக முந்தையது ) தேவநாகரி எழுத்து வந்த பிறகு கிரந்த எழுத்து மெல்ல,மெல்ல வழக்கொழிந்துப் போனது.
மேலும் மு.இளங்கோவன் அவர்கள் கூறுகையில்,"தமிழ்மொழி பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் பெற்றது. உலகில் பிறமொழிகளுக்கு இல்லாத தனித் தன்மை இதுவாகும். தமிழ்மொழி பன்னெடுங்கால வரலாறு உடையது. அரசியல், தன்னலம் காரணமாகத் தமிழ்மொழியின் சிறப்பு சில பொழுது குறைத்துக் கூறப்பட்டுள்ளதே தவிர உண்மையில் தமிழ் என்று தோன்றியது என்று வரையறை செய்ய முடியாதபடி காலப் பழைமை உடையது. தமிழ் உலகில் தோன்றிய முதன்மொழி என்ற பாவாணர் கூற்று சற்று மிகைப்படத் தோன்றுவதுபோல் இருந்தாலும் அண்மைக் காலமாகக் கிடைத்துவரும் சான்றுகள் (செம்பியன் கண்டீயூர் கல்வெட்டு, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுச் சான்றுகள், அரிக்கமேட்டு ஆய்வுகள், கேரள புதைபொருள் அகழ்வாய்வுகள்) இந்த உண்மையை நோக்கி நம்மை ஆற்றுப்படுத்துகின்றன".
தமிழ் மொழிக்குப் பின்னால் பல ஆண்டு காலம் கழித்தே கிரந்த எழுத்து ,தேவநாகரி போன்ற எழுத்துக்கள் தோற்றுவிக்கப்பட்டதாக தெரிய வருகின்றது ...இதன் மூலம் தமிழே மிகத் தொன்மையான மொழி என்பது அறியப்படுகின்றது ,இதற்குச் சான்றாக தற்போது கீழடியில் கிடைத்த பானை ஓட்டு எழுத்துக்கள் விளங்குகின்றது.
நமது தமிழைக் காக்க தனித்தமிழ் இயக்கம் என்பது தமிழகத்தில் 1916 ஆம் ஆண்டு அளவில் தோற்றுவிக்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள்[1], பாரதிதாசன், பெருஞ்சித்திரனார்[2], பரிதிமாற் கலைஞர், கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியவர்கள் தனித்தமிழ் இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களை போலவே பிறமொழிக் கலப்பால் மெல்ல மெல்ல மறைந்து வரும் நமது தமிழ் மொழியைக் காக்கும் கடமை தமிழர்களாகிய நாம் அனைவர்க்கும் உண்டு .
இனியாவது தமிழ் வார்த்தைகளை இனம் கண்டுபிடித்து பயன்படுத்த முயற்சி செய்வோம் !
பின்குறிப்பு :இந்தக் கட்டுரையில் நான் ஏதேனும் பிறமொழி வார்தைகளை பயன்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் ;).
நன்றி,
பிரதீபா பிரேம்.
.

சம்ஸ்கிருத வார்த்தைகள்
|
தமிழ் வார்த்தைகள்
|
அக்கணம்
|
அப்பொழுது
|
அக்னி
|
நெருப்பு ,தீ ,அனல் எரி
|
அஞ்சலி
|
கும்பிடல், வணக்கம் செய்தல்
|
பாரம்
|
சுமை
|
அகந்தை
|
இறுமாப்பு, செருக்கு
|
அகதி
|
அறவை, வறியர், ஏழை, புகலிலார்,\யாருமற்றவர்,
ஆதரவற்றவர்
|
அங்கம்
|
உடல்உறுப்பு
|
அனுபவம்
|
பட்டறிப்பு ,நுகர்வு
|
அவகாசம்
|
ஓய்வு
|
அவசரம்
|
விரைவு
|
அவசியம்
|
தேவை
|
அரசன்,ராஜா
|
மன்னன்,வேந்தன்,கோன்
|
இலக்கம்
|
எண்
|
கட்டில்
|
மஞ்சம்
|
கடிகாரம்
|
கன்னல்,மணிக்கூடு
|
கிராமம்
|
சிற்றூர்
|
கீதம், கானம், கானா
|
பாட்டு,பாடல்
|
சட்டை
|
அங்கராத்து,மேலாடை,மெய்ப்பை
|
செருப்பு
|
பாதணி,காலணி

No comments:
Post a Comment