10/16/19

           பறையிசை

திசையெட்டும் கொட்டி வரும் -நாம் 
திமிறி எழ ஒலி  தெறிக்கும் !
தீரமிங்கே எழுந்து நிற்கும் -உன்னிசை கேட்டால் 
கோழைக்கும் வீரம் பிறக்கும் !
பண்டைய தமிழரின் வீர முழக்கம் நீ ,
பாங்காய் இசைக்கப்படும் 
எமது பண்பாட்டு சின்னமும் நீ !-
பறையிசை இடி போல், இனியும் முழங்கட்டும் !
வாழ்க தமிழ் ! வளர்க பறையிசை!


No comments:

Post a Comment