12/15/09

குழந்தை!

சின்ன சின்னக்  காலெடுத்து  
வண்ணக்  கிளி நீ நடக்க,
அன்னை மனம் துள்ளுதடி
அள்ளி அணைக்க எண்ணுதடி!
பிஞ்சுக்  கைகள் ஆட்டி ஆட்டி
என்ன நீயும் பேசுகிறாய்?
முல்லைப்  பூக்கள் மலர்வதை போல்
நீயும் சிரித்து காட்டுகிறாய்!
தத்தி தத்தி நீ நடக்க
தளிர்க்குதடி உள்ளமிங்கே !
துள்ளும் முயல் குட்டி நீயும்
துள்ளி துள்ளிப்  போவதெங்கே ?
அன்னை நானும் உணவு ஊட்ட
உந்தன் பின்னால் அலைவதெங்கே?
கள்ளமில்லாப்  பிள்ளை  நிலா
கையில் வந்து இருக்கிறதே!
கட்டித்  தழுவி முத்தமிட
களியும் பெருகி வருகிறதே !
என்ன தவம் நானும் செய்தேன்?
உன்னை நானும் பெற்றெடுக்க!
இல்லல் தீர்க்கும் இறைவன் போல
இன்னல் தீர நீ சிரித்தாய்!
கன்னத்தில் நீயும் முத்தமிட்டால்
கவலை மறந்துப்  போகுதடி!
உன் கையால் நீயும் தீண்டுகையில்
கால்கள் வானில் மிதக்குதடி!
இதழ் விரியா மொட்டுப்  போல
நீயும் உறங்கி கிடக்கையிலே ,
என இதய பூக்கள் விரியுதடி உன்னை
அது போல் பார்த்திடவே !
கரிய வண்டு கண்ணைக்  கொண்டு
சிறிய பார்வை பார்த்திடு நீ
தெரியும் உலக சொர்க்கமெல்லாம்
எந்தன் மன கண்ணின் முன்னே! 

2 comments: