அழகான மழைக் காலம் !
தேநீரோடு பருகிக் கொண்டிருந்தேன்!
எதோ சத்தம் ,
எட்டிப் பார்த்தேன் வெளியில்
அரைகுறையாய் எழுந்து நிற்கும் எதிர் வீடு
அலறி அடித்துக் கொண்டு ஓடி வரும் தாய்
இன்று தான் உலகை எட்டிப் பார்க்கும் நாய் குட்டிகள்
ஆமாம் அந்தத் தாயும் நாய் இனம் தான் !
கண்ணில் நீர் தளும்ப
நெஞ்சில் எதோ அடைக்க
ஓடினேன் அண்ணனிடம்!!
இந்த சிறியவளின் சின்ன மனதை புரிந்தவன் என்பதால்
உதவிக் கிட்டியது ஓரளவு
உணரவாய்ப் பேசினான் அண்ணன்
நாய் பிடிப்பவனிடம் !
புலம்பியபடி மூன்றில் ஒன்றைப்
புண்ணியவான் கொடுத்தான் !
ஆனந்தத்தின் எல்லையை
அனுபவித்தேன் முதன் முதலாய் !
என்னுடன் சேர்ந்து மறைந்து நின்ற அந்தத் தாயும்!
அம்மாவின் பழைய புடவையெல்லாம்
ஆனது பட்டு மெத்தையாய்!
கொஞ்சிக் களித்தேன்,
குதுகலப்பட்டேன், அம்மாவை விட்டு
குட்டியைப் பிரித்தறியாமல்!
இரவல்லம் புது உறவுடன்
அழகழகாய் கனவுகள் !
ஏக மகிழ்ச்சியில் கேட்கவில்லை
தாய் நாயின் ஓலமும் , குட்டியின் முனகலும்!
சூரியனின் கரங்களில் ஒன்று முகத்தை தழுவியது
விழித்த விழி மூட மறுக்க
எழுந்து ஓடினேன் திண்ணைக்கு!
படுக்கையை மட்டும் விட்டு விட்டு
பாசத்தைத் தேடி போய் விட்டது அந்த குட்டி!
மனமெல்லாம் ஆயிரம் மலையை சுமக்கும் கனத்துடன்
கருவிழியைக் கண்ணீர் மறைக்கப் போனேன் அம்மாவிடம்!
அம்மா அணைத்தாள் உச்சி முகர்ந்தாள்!
பிறகு சொன்னாள் மந்திரப் புன்னகையோடு
அந்த நாய் குட்டியும் உன் போலதானே ?
இதழோடு சேர்ந்து இதயமும் சிரித்தது !
எதிர் வீட்டில் நின்ற நாய்க்கும் , குட்டிக்கும் கூடத்தான்!
தூறலைத் தூவி கொண்டிருக்கும் வெளிர் வானம் !
விடுமுறையின் விடுதலையை தேநீரோடு பருகிக் கொண்டிருந்தேன்!

No comments:
Post a Comment