11/17/09

நிகழ்காலம்

அழகான வானம் !
அதனிடையே பவனி வரும் சூரியன்!
வண்ண வண்ணச்  சாமரங்கள் வீசும்
மேகக்  கூட்டங்கள் !
வானத்தின் கரிய வண்ண ஆடையில்
மின்னும்  விண்மீன்ப்  பந்துகள் -இடையே 
சிருங்கரமாய் சிரிக்கும்
வெள்ளை நிலவு!
சுகந்தமாய்   வீசும் தென்றல்-அதில்
சுகமாய் தலையசைக்கும் பசும் மரங்கள்!
ஆர்வமாய் துள்ளி வரும் அருவி
அழகாய் ஆர்ப்பரிக்கும்  அலைகள் !
கள்ளமில்லாப்  பிள்ளையின்
கொள்ளைச்  சிரிப்பு !
கவலையெல்லாம் தாங்கிக்
கொள்ளும் பெற்றோர்  !
கனவையெல்லாம் பகிர  நல்ல நண்பன் !
இத்தனை சுகங்கள்,
இன்றைக்காகக்  கொட்டிக்  கிடக்கின்றன!
கலங்காதே கடந்த காலத்திற்காக 
கடமையைச்  செய்
உன் நிகழ் காலத்திற்காக-பலனடைவாய்
எதிர்காலத்திற்கும் சேர்த்து !

No comments:

Post a Comment