மழலை பூக்கள் !
ஈரக் காற்றால் என்னைத் தழுவும்
தென்றலைக் காட்டிலும் இதமானது
எச்சில் கலந்த உன் முத்தமடி !
வசந்த கால மரங்கள் என் மீது
உதிர்க்கும் பூக்களின் மென்மை
நீ தொடுவதைப் போல்
அவ்வளவு சுகமானது அல்ல கண்ணே !
அவ்வளவு சுகமானது அல்ல கண்ணே !
சில நேரம் அறியாமல் பட்ட
தீ காயத்தை விட சுட்டது
உன் கண்ணீர்
என் மேனியை!
தீ காயத்தை விட சுட்டது
உன் கண்ணீர்
என் மேனியை!
நீ சிரிப்பதை தினமும்
பார்ப்பதாலோ என்னவோ,
பூக்களின் அழகெல்லாம்
பெரிதாய்த் தெரிவதில்லை !
பார்ப்பதாலோ என்னவோ,
பூக்களின் அழகெல்லாம்
பெரிதாய்த் தெரிவதில்லை !
உன் கனிவான பார்வை ஒன்றால்
பொடித்துப் போட்டாய்
என் கோபக் கணைகளை!
எத்தனை அழுதாலும் சிரிக்காமல்
இருக்க முடியவில்லை
நீ பேசும் மழலைக்கு முன் !
உன் மழலைப் பேச்சைக் கேட்கத்தான்
புல்லினமெல்லாம் எட்டிப் பார்க்கிறதோ
நம் வீட்டை?
அன்னமெல்லாம் சொக்கி நிற்கும்
அழகான உன் நடையைக் கண்டோ? !
இறைவனிடம் ஒன்றுமில்லை
இனி கேட்பதற்கு
அவன் உன்னையே எனக்கு கொடுத்த பின்பு!
பொடித்துப் போட்டாய்
என் கோபக் கணைகளை!
எத்தனை அழுதாலும் சிரிக்காமல்
இருக்க முடியவில்லை
நீ பேசும் மழலைக்கு முன் !
உன் மழலைப் பேச்சைக் கேட்கத்தான்
புல்லினமெல்லாம் எட்டிப் பார்க்கிறதோ
நம் வீட்டை?
அன்னமெல்லாம் சொக்கி நிற்கும்
அழகான உன் நடையைக் கண்டோ? !
இறைவனிடம் ஒன்றுமில்லை
இனி கேட்பதற்கு
அவன் உன்னையே எனக்கு கொடுத்த பின்பு!
No comments:
Post a Comment