பெண்ணே,
அழகழகாய் ஆடைச் சூட்டி
அணிகலன்கள் பலப் பூட்டி
அக்கறையாய் வளர்த்தார்கள் !
ஆகாயக் கருமை எடுத்து
ஆசையாய் மை தீட்டி
ஆவி பறக்க உணவுப் படைத்து
ஆவலாய்ப் பள்ளி அனுப்பினார்கள்!
இனிமையான பாசம் தந்து
இளையமயிலேக் கல்வி தந்து
இன்று நாளை என கனவுக் கண்டு
இயன்றவரை என்று இல்லாமல்
இருப்பதெல்லாம் உனக்கே தந்தார்கள்!
ஈக்களைப் போல் தினம் உழைத்து
ஈன்று வந்த சொத்தையெல்லாம்
ஈவிரக்கம் இல்லாமல் எடுத்து வந்தோமே!
ஈனப் பிறவி என எண்ணாதே!
உயிர் தந்து உலகம் தந்த
உத்தமர்கள் உன் தாய் தந்தை
உனக்கெனக் கொடுத்த அறிவை
உலகம் உணர செய்து விடு!
ஊணுறக்கம் மறந்து விடு- மன
ஊசலாட்டம் நிறுத்தி விடு
ஊக்கம் கொண்டு எழுந்து வா-மன
ஊனம் அதைத் தகர்த்து வா!
எண்ணியதைப் படைக்க வா-பிறர்
எண்ணாததை முடிக்க வா
எழுச்சிக் கொண்டு உழைக்க வா
எல்லை இல்லா உலகம் காண வா!
ஏறு நடைப் போட்டு நட
ஏழை இல்லா நாட்டை படை
ஏக்கம் கொண்டு முடங்காதே -வெற்றி
ஏணி ஏறத் தயங்காதே !
ஐயமிது உனக்கெதற்கு
ஐவிரலும் துணையிருக்கு
ஐம்புலனைக் காத்திடு நீ
ஐராவதம் ஏறிடு நீ !
ஒடுக்கிப் பார்க்கும் உலகமிது
ஒதுக்கி நீயும் புறப்படு
ஒளியை நோக்கி நடை போடு
ஒருவருமில்லை தடை போட!
ஓய்ந்து நிற்கும் உயிர்கள் அவை
ஓடி நீயும் உதவி விடு
ஓட்டம் நின்ற ஓடை அவை
ஓட நீயும் புத்துயிர் ஊட்டு!
ஒளசித்தியம்(தகுதி) வளர்த்துக்கொள்
ஒளதாரியத்திற்கு(பெருந்தன்மை) இவளே என சொல்லச் செய்,
ஔவைப் போன்ற பெண்ணாயிரு!
அஃதான்று (அது இல்லாமல்)வேறில்லை வாழ்வினிலே!
அழகழகாய் ஆடைச் சூட்டி
அணிகலன்கள் பலப் பூட்டி
அளவில்லாப் பூரிப்புடன்
அக்கறையாய் வளர்த்தார்கள் !
ஆகாயக் கருமை எடுத்து
ஆசையாய் மை தீட்டி
ஆவி பறக்க உணவுப் படைத்து
ஆவலாய்ப் பள்ளி அனுப்பினார்கள்!
இனிமையான பாசம் தந்து
இளையமயிலேக் கல்வி தந்து
இன்று நாளை என கனவுக் கண்டு
இயன்றவரை என்று இல்லாமல்
இருப்பதெல்லாம் உனக்கே தந்தார்கள்!
ஈக்களைப் போல் தினம் உழைத்து
ஈன்று வந்த சொத்தையெல்லாம்
ஈவிரக்கம் இல்லாமல் எடுத்து வந்தோமே!
ஈனப் பிறவி என எண்ணாதே!
உயிர் தந்து உலகம் தந்த
உத்தமர்கள் உன் தாய் தந்தை
உனக்கெனக் கொடுத்த அறிவை
உலகம் உணர செய்து விடு!
ஊணுறக்கம் மறந்து விடு- மன
ஊசலாட்டம் நிறுத்தி விடு
ஊக்கம் கொண்டு எழுந்து வா-மன
ஊனம் அதைத் தகர்த்து வா!
எண்ணியதைப் படைக்க வா-பிறர்
எண்ணாததை முடிக்க வா
எழுச்சிக் கொண்டு உழைக்க வா
எல்லை இல்லா உலகம் காண வா!
ஏறு நடைப் போட்டு நட
ஏழை இல்லா நாட்டை படை
ஏக்கம் கொண்டு முடங்காதே -வெற்றி
ஏணி ஏறத் தயங்காதே !
ஐயமிது உனக்கெதற்கு
ஐவிரலும் துணையிருக்கு
ஐம்புலனைக் காத்திடு நீ
ஐராவதம் ஏறிடு நீ !
ஒடுக்கிப் பார்க்கும் உலகமிது
ஒதுக்கி நீயும் புறப்படு
ஒளியை நோக்கி நடை போடு
ஒருவருமில்லை தடை போட!
ஓய்ந்து நிற்கும் உயிர்கள் அவை
ஓடி நீயும் உதவி விடு
ஓட்டம் நின்ற ஓடை அவை
ஓட நீயும் புத்துயிர் ஊட்டு!
ஒளசித்தியம்(தகுதி) வளர்த்துக்கொள்
ஒளதாரியத்திற்கு(பெருந்தன்மை) இவளே என சொல்லச் செய்,
ஔபிரகம்ப்(ஆட்டுமந்தை) போல் அடையாதே
ஔவைப் போன்ற பெண்ணாயிரு!
No comments:
Post a Comment