3/4/16

புவி நாள்

                                                                      நம் கையில் பூமி !

நமது தமிழினம் என்றைக்குமே நன்றி உணர்வுக்குப்  பஞ்சமில்லாத இனம் ,எனவேதான் சூரியனுக்கும் நன்றி செலுத்தி பொங்கல் படைக்கிறோம்,
அதே போல் ஏப்ரல் 22 ஆம் நாள் ஒரு முக்கியமான நாளாக கொண்டாடப்பட வேண்டும், நம்மையெல்லாம்  தாங்கி நிற்கும்  பூமித்தாய்க்கு நன்றி செலுத்தும் நாள் புவி நாள் என அனைத்து மக்களாலும் சொல்லப்படுகிறது. இந்நாளைப் பற்றிய விழிப்புணர்வை நாம் அனைவரும் பெற வேண்டும்.

புவி நாள் புவியின் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சரியான மதிப்பீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதாகும். 1970 ஆம் ஆண்டு அமெரிக்க செனட்டர் கய்லார்ட் நெல்சன் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட புவி நாள் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.(நன்றி :விக்கி பீடியா )
     நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமிக்கு நாம் கொடுக்கும் மிகப் பெரிய பரிசு மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், சீர்படுத்தப் படாத கழிவு நீர் , நச்சுத் தன்மையுள்ள குப்பைகள், பூச்சிக்கொல்லிகள் , காடுகளை அழித்தல் மற்றும் காட்டு விலங்குகளின் பேரழிவு போன்றவை தான்.நாம் புவிக்கு விளைவிக்கும் கேடுகளால் பாதிக்கப்பட்ட போவது நாமும்,நமது சந்ததியினரும் தான்.

சில மாதங்களுக்கு முன்பு புவி சூடாவது பற்றிய விவாதம் மிக
பரவலாக பேசப்பட்டது அந்த நேரத்தில் நாமும் சுற்றுச் சூழல் பேரழிவைப் பற்றியெல்லாம் கட்டுரையில் வாசித்து தள்ளியிருப்போம்   ,அதெல்லாம் அந்த கணத்தோடு  மறைந்து விடும் ,அவ்வாறு இல்லாமல் நம் மக்கள் சுற்றுச் சூழலை பேணி காக்க பிரயத்தன பட வேண்டும்.உதாரணமாக நமது தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் 20 வருடங்களுக்கு முன்பு இருந்த மரங்களில் 4 இல் ஒரு பங்கு இப்போது  இருந்தால் அதைவிட நல்ல செய்தி  வேறு இல்லை.
மரங்களை அழிப்பது புவி சூடதலின் முக்கிய காரணியாக கருதப்படுகிறது .
புவி சூடாவதால் ஆர்டிக் போன்ற பனி பிரதேசங்களில்  பனி உருகி
கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் எனவும் இதனால் நீரில் மூழ்கி  பல பகுதிகள் அழிந்து விடும் அபாயம் உள்ளதாகவும் அறிவியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 இந்த அவசர உலகில் நாம் எவ்வளவைப் பற்றித்தான் கவலைப் படுவது என்கிறீர்களா? புவியின் நலனைப் பற்றி நாம் சிந்தித்து தான் ஆகா வேண்டும். இதற்காக நம்மால் முடிந்த சில கடமைகளை நாம் செய்யலாம்.
                    1 .மரங்களை நடலாம் .
                    2 .இயன்றவர்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனங்களை                                  வாங்கலாம்.
                     3 .பிளாஸ்டிக் பைகள் உபயோகபடுத்துவதை குறைத்து காகிதப்                                   பைகளை பயன்படுத்தலாம் .
                     4 .மரங்களை வெட்டாமல் இருக்கலாம்.
                      5 .இளைய தலை முறையினருக்கு சுற்றுச்  சூழலைபேணுவது                                     பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் .

சுற்றுசூழலைக் காப்பதன் மூலம் நாம் நம்மையே  கத்துக் கொள்கிறோம்   என்பதை அறிந்தால் நாமும் ,புவியும் வளமோடு வாழலாம்.
புவிநாளை புரிந்து கொள்ளுங்கள், மனித இனத்தை பேணுங்கள்.நன்றி.

No comments:

Post a Comment