பறவைகள்
சிறுவர்களே உங்களுக்கெல்லாம் பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும் அல்லவா ? , வாருங்கள் அவைகளைப் பற்றி நிறைய தெரிந்துக் கொள்ளலாம் .பறவைகள் என்பவை முட்டை இடுகின்ற விலங்குகள் பிரிவைச் சேர்ந்தது ,விலங்கா என்று ஆச்சர்யமாக உள்ளதா ? ஆமாம் , விலங்குகளிலுள்ள பறவை எனும் வகுப்பில் 9672 பறவைகள் இருக்கிறது !
நம் விரல் நீளமும் 1 .8 கிராமும் உள்ள தாரிச் சீட்டிலிருந்து (ஹம்மிங் பேர்ட் )9 அடி உயரமும் 156 கிலோ எடையும் கொண்ட நெருப்பு கோழி வரை பறவைகள் உண்டு.
அனைத்து பறவைகளாலும் பறக்க முடியாது உதாரணமாக நெருப்புக் கோழி, பென்குவின்,கிவி ஆகியவற்றை சொல்லலாம்.பறவைகள் பாலூட்டிகள் போன்று நான்கு அறை இதயத்தையும் ,வெது வெதுப்பான இரத்தத்தையும் பெற்றிருக்கும் .அதே சமயம் ஊர்வன போன்று முட்டையிட்டுக் குஞ்சும் பொறிக்கும்.நம் முடி,நகம் அதிலெல்லாம் உள்ள கெரோட்டின் தான் பறவையின் இறகிலும் இருக்கிறது .ஆனால் நமக்கு நகம், முடி வளர்வது போன்று எப்பொழுதும் அதன் இறகு வளராமல் குறிப்பிட்ட அளவோடு நின்று விடும் . வருடத்திற்கு ஒரு முறை சிறகை உதிர்த்து புதிதாக இறகை வளர்த்துக் கொள்ளும் .
பறவைகள் கூரிய பார்வை திறனைக் கொண்டிருக்கும்.கண்களில் 3 இமைகள் இருக்கும் ,மேல் இமை நம்மைப் போலவும் ,கீழ் இமை துங்கும் போது மூடவும்,மற்றொரு இமை கண்களை அதிக காற்று,ஒளி போன்றவற்றிலிருந்துக் காப்பற்றவும் உதவும். பறவையின் காது இறகுகளால் மூடி உட்புறமாகவே இருக்கும்,கேட்பதற்கு மட்டுமல்லாமல், பறக்கும் போது உடலின் சமநிலைக்காகவும் உதவும்.
பறவையின் மூளையும் மிகவும் நன்கு வளர்ச்சியடைந்தது அதில் உள்ள ஹைபர்ஸ்ட்ரியாடம் எனும் நமக்கில்லாத பகுதியே பறவைகள் பாட்டெல்லாம் கற்றுக்கொள்ள உதவுகிறதாம்.
ஆந்தயைத் தவிர பெரும்பாலான பறவைகள் இரவிலேயே தூங்குகின்றன .பறவைகள் பறக்கும் போது "v "வடிவத்திலேயே பறக்கும்.முன்னால் போகும் பறவையின் இறக்கை உண்டாக்கும் காற்றழுத்தத்தினால் பின்னால் போகும் பறவையெல்லாம் சுலபமாக பறக்கும்.டோடோ ,பெரிய ஓக் ,யானை பறவை போன்ற பறவைகள் அழிந்து விட்டன .
என்ன குழந்தைகளே பறவைகள் பற்றி நிறைய தெரிந்து கொண்டீர்களா ?அடுத்த அறிவியல் பக்கம் என்ன சொல்லப் போகிறது என்று யோசித்துக் கொண்டே போய் விளையாடுங்கள் ,மீண்டும் அடுத்த மலரில் பார்க்கலாம் .
மூலம்:விக்கிபீடியா .
No comments:
Post a Comment