நினைவில் நின்றவர்கள்
நகைச்சுவை என்பதே நம்மை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் மிகச் சிறந்த மருந்து,ஆம் நமது மனதிற்கான நல்ல மருந்தாக நகைச்சுவையைக் கருத வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்,இத்தகைய நல்ல மருந்தை அளித்த
மகத்தான மனிதர்தான் ஏப்ரல் 16 ,1889 ஆம் ஆண்டு பிறந்த சர் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் என்கின்ற சார்லி சாப்ளின் ,ஹாலிவுட் திரையுலகின்
பிரம்மாண்ட நகைச்சுவைக் கலைஞர்.இவருக்கு நடிகர் ,இயக்குநர்,திரைக்கதை ஆசிரியர் ,தயாரிப்பாளர் என பல முகங்கள் உண்டு.
இவர் 'தி சர்க்கஸ்' என்ற படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றார் ,மேலும் திரைப்படத் துறையில் இவர் ஆற்றிய பணிகளுக்காகவும் 1972 இல் மற்றொரு ஆஸ்கார் விருது பெற்றார்.1940 இல் வெளியான 'தி கிரேட் டிக்டேடர்' படம் மூலம் சர்வாதிகாரி ஹிட்லரின் கொள்கைகளை கண்டித்தார்.இன்றளவும் இவரது நகைச்சுவைக்கு இணையாக எதையும் ஒப்பிடமுடியாத அளவிற்கு சிறந்தக் கலைஞர் சாப்ளின்.
அவரைபற்றிய சிறப்பு செய்திகள் சில,
இத்தகைய சிறப்பு மிக்க சாப்ளின் 1977 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்றைக்கு
இறந்தார் ,பணம் பறிப்பதற்காக இவரது உடலை கல்லறையிலிருந்து திருடினர் பதினோரு வாரங்களுக்கு பிறகுஅவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது .அவர் மறைந்தாலும் அவரது நகைச்சுவை நம்மை எப்பொழுதும் சிரிக்க வைக்கும்.
No comments:
Post a Comment