மார்கழிக் கோலங்கள்!
கதிரவன் கண்ணைத்
திறந்திராக் காலை,
கண்ணைக் கசக்கிக் கொண்டு வெளியே வந்தேன்
மங்கலான வெளிச்சத்தில்
மங்களகரமாய் கோலமிட்டாள் அக்கா!
ஆசையாய் அருகில் சென்றமர்ந்தேன் வண்ணமிட
அதிர்ச்சியாய் என்னைப் பார்த்தாள்!
அழகான கோலமடி,
ஆபத்தாய் நீயும் வந்தாய் ,
வைகறையில் தூங்கக் கூடாதா ?
வாசல் வேலை நான் பார்த்துக் கொள்வேனே !
கெஞ்சினால் அக்கா,
கொஞ்சமும் கேட்கவில்லை நான்.
கண்ணே என்றாள் கலக்கமாய்
கொல்லையில் உள்ள மலரைக் கொண்டு வா,
வண்ணமிட்டக் கோலத்தில்
வகையாய் வைக்கலாம் என்றாள் -உன்
எண்ணமெல்லாம் நான் அறிவேன்
இருக்கட்டும் போகிறேன் என்றேன்!
குதுகலமாய் கொல்லைக்கு ஓடினேன்-அங்கே
குளித்து நின்ற புதுமலர்கள்-என்னைக் கண்டு
சிரித்து நின்றக் காட்சி கண்டேன் !
மஞ்சள் பட்டைச் சூடி நின்ற
மங்கையவள் போலே என்னை
மயங்க வைத்து
நகைக்கக் கண்டேன்-என்
மனமும் அதில் நிலைக்க நின்றேன்!
என் நினைவெல்லாம் அள்ளிக்கொண்ட
மஞ்சள் நிற நாயகியில் என்
நெஞ்சம் நிறைத்த ஒரு மலரை
நேர்த்தியாய் பறித்தெடுத்தேன் ,
வண்ணக் கோலத்தின் வனப்பை
இன்னும் மெருகேற்ற
மஞ்சள் நாயகி மலராய் அமர்ந்தாள்,
கதிரவனும் வந்தான் -அதன்
அழகில் கண் மயங்கி நின்றான்!
கண்கள் கூச விழித்துப் பார்த்தேன்
அதே மார்கழிக் கதிரவன் தான்
ஆனால் அட்லாண்டாவில்!
கதிரவன் கண்ணைத்
திறந்திராக் காலை,
கண்ணைக் கசக்கிக் கொண்டு வெளியே வந்தேன்
மங்கலான வெளிச்சத்தில்
மங்களகரமாய் கோலமிட்டாள் அக்கா!
ஆசையாய் அருகில் சென்றமர்ந்தேன் வண்ணமிட
அதிர்ச்சியாய் என்னைப் பார்த்தாள்!
அழகான கோலமடி,
ஆபத்தாய் நீயும் வந்தாய் ,
வைகறையில் தூங்கக் கூடாதா ?
வாசல் வேலை நான் பார்த்துக் கொள்வேனே !
கெஞ்சினால் அக்கா,
கொஞ்சமும் கேட்கவில்லை நான்.
கண்ணே என்றாள் கலக்கமாய்
கொல்லையில் உள்ள மலரைக் கொண்டு வா,
வண்ணமிட்டக் கோலத்தில்
வகையாய் வைக்கலாம் என்றாள் -உன்
எண்ணமெல்லாம் நான் அறிவேன்
இருக்கட்டும் போகிறேன் என்றேன்!
குதுகலமாய் கொல்லைக்கு ஓடினேன்-அங்கே
குளித்து நின்ற புதுமலர்கள்-என்னைக் கண்டு
சிரித்து நின்றக் காட்சி கண்டேன் !
மஞ்சள் பட்டைச் சூடி நின்ற
மங்கையவள் போலே என்னை
மயங்க வைத்து
நகைக்கக் கண்டேன்-என்
மனமும் அதில் நிலைக்க நின்றேன்!
என் நினைவெல்லாம் அள்ளிக்கொண்ட
மஞ்சள் நிற நாயகியில் என்
நெஞ்சம் நிறைத்த ஒரு மலரை
நேர்த்தியாய் பறித்தெடுத்தேன் ,
வண்ணக் கோலத்தின் வனப்பை
இன்னும் மெருகேற்ற
மஞ்சள் நாயகி மலராய் அமர்ந்தாள்,
கதிரவனும் வந்தான் -அதன்
அழகில் கண் மயங்கி நின்றான்!
கண்கள் கூச விழித்துப் பார்த்தேன்
அதே மார்கழிக் கதிரவன் தான்
ஆனால் அட்லாண்டாவில்!
No comments:
Post a Comment