படைப்போம் பழைய பாரதம் !
மாதம் மும்மாரிப் பெய்து
மழையெல்லாம் குளமாக்கி
கழனியெல்லாம் கதிர் விளைந்து
கதிரெல்லாம் போரடித்து
களம் களமாய் காயவைத்து
நிறைகுடமாய் மனம் நிறைந்து
மண்ணோடு மனிதன் கலந்து
மனிதனோடு மண் கலந்த நாளெல்லாம்
கனவோடு கனவாகி
நினைவோடு நில்லாமல் போனது !
சூழ்நிலையை சுரம் செய்து
வானிலையை வதம் செய்து
வையகத்தின் மழைக் கொன்று -உணவிற்கு
கையேந்தி நிற்கும் காலம்
கையருகில் உள்ளது !
தரிசெல்லாம் கழனியாக்கி
கடல் கடந்து வணிகம் செய்து
வையகத்தில் வாழ்ந்து நின்ற பாரதம்
இன்று தரிசெல்லாம் கூறு போட்டு
காசுக்கு மாலைப் போட்டு
விளைநிலத்தை விலைக்கு விற்று
வீணாய்ப் போய் நிற்கின்றது !
மரங்களும் ,மலைகளுமாய்
குளங்களும்,குளிர் நிலங்களுமான பூமி
ஆலைகளும் ,சாலைகளுமாய்
கடைகளும் ,கட்டுமானங்களுமாய்
நிலைகுலைந்து நிற்கின்றது !
போன வருடம் வந்து சென்ற வழியெல்லாம்
இன்று புதிதாய் தெரிகின்றது !
பூக்களாய் பூத்து கிடந்த மரமெல்லாம் -இன்று
புதுக் கட்டிடத்தின் கதவு ஜன்னல்களாய் !
ஒரு நிமிடம் கண்ணை மூடினாலும்
மூழ்கச் செய்யும் திறந்த கழிவு நீர்க் கால்வாய்கள் !
ஒரு நிமிடம் மூக்கை மூடாமல்
முன்னேறி போக முடியா முக்கிய நகரங்கள் !
பாரதத்தை விட்டு பெரும் தொலைவில் நாம்
ஆனால் பாரம் மட்டும் மனதில்!
படைப்போம் பழைய பாரதம்
புலம் பெயர்ந்த நம்மின் பங்களிப்போடு !
மாதம் மும்மாரிப் பெய்து
மழையெல்லாம் குளமாக்கி
கழனியெல்லாம் கதிர் விளைந்து
கதிரெல்லாம் போரடித்து
களம் களமாய் காயவைத்து
நிறைகுடமாய் மனம் நிறைந்து
மண்ணோடு மனிதன் கலந்து
மனிதனோடு மண் கலந்த நாளெல்லாம்
கனவோடு கனவாகி
நினைவோடு நில்லாமல் போனது !
சூழ்நிலையை சுரம் செய்து
வானிலையை வதம் செய்து
வையகத்தின் மழைக் கொன்று -உணவிற்கு
கையேந்தி நிற்கும் காலம்
கையருகில் உள்ளது !
தரிசெல்லாம் கழனியாக்கி
கடல் கடந்து வணிகம் செய்து
வையகத்தில் வாழ்ந்து நின்ற பாரதம்
இன்று தரிசெல்லாம் கூறு போட்டு
காசுக்கு மாலைப் போட்டு
விளைநிலத்தை விலைக்கு விற்று
வீணாய்ப் போய் நிற்கின்றது !
மரங்களும் ,மலைகளுமாய்
குளங்களும்,குளிர் நிலங்களுமான பூமி
ஆலைகளும் ,சாலைகளுமாய்
கடைகளும் ,கட்டுமானங்களுமாய்
நிலைகுலைந்து நிற்கின்றது !
போன வருடம் வந்து சென்ற வழியெல்லாம்
இன்று புதிதாய் தெரிகின்றது !
பூக்களாய் பூத்து கிடந்த மரமெல்லாம் -இன்று
புதுக் கட்டிடத்தின் கதவு ஜன்னல்களாய் !
ஒரு நிமிடம் கண்ணை மூடினாலும்
மூழ்கச் செய்யும் திறந்த கழிவு நீர்க் கால்வாய்கள் !
ஒரு நிமிடம் மூக்கை மூடாமல்
முன்னேறி போக முடியா முக்கிய நகரங்கள் !
பாரதத்தை விட்டு பெரும் தொலைவில் நாம்
ஆனால் பாரம் மட்டும் மனதில்!
படைப்போம் பழைய பாரதம்
புலம் பெயர்ந்த நம்மின் பங்களிப்போடு !
No comments:
Post a Comment