தாய்க்குருவி
என் ஜன்னலிளிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் ,
என் ஜன்னலிளிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் ,
இலை உதிர்ந்த மொட்டை மரங்களில்
ஏற்கனவே கட்டிய கூட்டை ஏக்கத்துடன்
சுற்றி வந்தன அந்த குருவிகள்,பனி மழை கொட்டியது,
குழந்தைக்கு குளிரும் என ஒரு
கம்பளியை இரண்டாக மாற்றினேன் மூடிய வீட்டினுள்,
ஜன்னல் திரையை விலக்கினேன்
கண்ட காட்சி கல் மனதை கரைத்தது
இறகுக் கம்பளிக்குள் மூடி கொண்டது தன் பிள்ளைகளை
அந்த தாய் குருவி திறந்தவெளி கூட்டினில் நனைந்தபடிதான் !
படுக்கைக்கு சென்று கம்பளியை போர்த்தினேன்
கனத்தது மனம்,உதறிதள்ளினேன் கம்பளியை,
நித்திரை நிறைந்தது தாய் குருவியின் நினைவுகளுடனே !
No comments:
Post a Comment