தமிழர்களும் அறிவியலும்!
நமது தமிழர்களின் கலாச்சாரமானது மிகவும் தொன்மையானது ,
பழந்தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்கையின் வாயிலாகவே நமக்கு
பல பல விடயங்களை வழங்கி சென்றுள்ளனர் .நாம் அறிந்தும் அறியாமலும் நமது அன்றாட வாழ்க்கையில் அறிவியல் நம்மோடு பின்னி பிணைந்து
உள்ளது, அது மருத்துவ அறிவியலாகட்டும் ,விஞ்ஞான அறிவியலாகட்டும்
அனைத்திலுமே நம் முன்னோர்கள் மிகச் சிறந்து விளங்கியதுடன் ,நமக்கும் அவற்றை விட்டு சென்றுள்ளனர் என்பதுதான் உண்மை.இத்தொடரின் மூலம்
அறிவியலோடு நமக்குள்ள பிணைப்பை அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள் ,
கோவில் என்பது நாம் அனைவரும் கடவுளிடம் சென்று நமது குறைகளை கூறுவதற்காகவும்,நமக்கு தேவையானவற்றை பட்டியலிடுவதற்கும் மட்டுமே என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ,அதனையும் தாண்டி அது ஒரு அறிவியல் பொக்கிஷம் என்பது நம்மில் பலர் அறிந்திராத உண்மை ....! இந்த இதழில் நமது கோவில் கோபுரத்தில் உள்ள கும்பத்தின் சிறப்பையும் ,அதனால் நாம் அடையும் நன்மைகளையும் காண்போம் .....
நாம் கோவிலுக்குள் நுழையும் போது கோவில் கோபுரத்தை பார்த்து கும்பிடுவோம் ,நீங்கள் எப்போதாவது எண்ணியதுண்டா, அதன் மேல் இருக்கும் கும்பம் எதற்கு ?அதனால் நமக்கு என்ன பயன் என? கும்பமானது
தங்கம் ,வெள்ளி, செம்பு,துத்தம் ,ஈயம் போன்ற ஐன்பொன்களால் செய்யப்பட்டுள்ளது ,இவை மிகச்சிறந்த மின்கடத்தி ஆக பயன்படுத்தப் பட்டு இடி ,மின்னல் போன்ற இயற்கை பேரிடரினால் உண்டாகும் அபரிதமான மின்சாரத்தை உள்வாங்கி தன்னை சுற்றியுள்ள 7400 சதுர கிலோ மீட்டர் வரை யாருக்கும் பாதிப்பு வராமல் காக்கிறது.ஒரு கோவிலைச் சுற்றி 4 கோபுரம் என வைத்துக் கொண்டாலும் நாம் எந்த அளவில் பாதுகாப்பாக இரு(ந்திரு)க்கிறோம் என உணர முடியும் நம்மால் .
மேலும் இந்த கும்பத்தினுள் 50 கிலோ முதல் 100 கிலோ வரையிலான கம்பு ,வரகு,சோளம் ,திணை ,சாமை போன்ற சிறுதானியங்கள்
நிரப்பபட்டுள்ளது .இதில் வரகானது மிகச்சிறந்த மின்சாரத்தை தக்க வைக்கும் தன்மை கொண்ட தானியம் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது .வெள்ளம் ,நிலநடுக்கம் ,நெருப்பு போன்ற இயற்கை பேரிடர்களால் மக்களின் பொருட்கள் முற்றிலும் அழியும் நிலை வரும் பொழுது ,இந்த கும்பதிலுள்ள தானியங்களை பயிரிட்டு மீண்டும் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்வதற்காகவே இவை பாதுகாப்பாக வைக்கபட்டுள்ளது ,இது எத்தகைய மிகச்சிறந்த ஏற்பாடாகும்! இதற்காக நமது முன்னோர்களை எப்படி பாராட்டினாலும் தகுமல்லவா?
மேலும் ,12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு என்னும் பெயரில் கோவிலானது பழுது பார்க்கப்பட்டு கோபுரத்தின் கும்பத்திலுள்ள தானியங்கள் மாற்றப்படுகிறது , 12 ஆண்டுகளில் இந்த தானியங்கள் தனது தனித் தன்மையை இழந்து விடும் என்பதாலேயே இத்தகைய குடமுழுக்கு நிகழ்வு நமது முன்னோர்களால் ஏற்படுத்த பட்டுள்ளது .இதனால் தான்
"கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி விட்டு போயிருக்கிறார்கள் .
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுர கலசங்கள்:
தஞ்சை பெரிய கோவிலின் கோபுர கலசங்கள் :
உதாரணமாக 2010 வந்த மிக சக்தி வாய்ந்த மின்னாலால்
தஞ்சை பெரிய கோவிலின் ராஜா ராஜன் வாயிலில் உள்ள ஒரு கும்பமானது
மின்சாரத்தை தன்னுள் வங்கி சேதமடைந்து கோவிலும் சுற்றி உள்ள மக்களும் பாதுகாப்பாக இருக்க உதவியுள்ளது .
சேதமடைவதற்கு முன் ராஜராஜன் கோபுரம் :
சேதமடைந்த பின் ராஜராஜன் கோபுரம் :
இந்தக் கட்டுரையில் கோவில் கும்பத்தினால் நமக்கு விளையும் நன்மைகளையும் ,நமது பழந்தமிழர்களின் அறிவியல் திறனையும் கண்டு
உங்களுடன் சேர்ந்து நானும் வியந்தேன் ! மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம், புதிய தகவல்களுடன் ,நன்றி !

No comments:
Post a Comment