6/19/16


                                     அப்பாவிற்காக!

அப்பா ,

தோளில் தாங்கி ,மடியில் ஏந்தி 

நெஞ்சில் உறங்க வைத்து 

கை பிடித்து, உங்களுடன் 

மண் பார்த்த நியாபகம் எல்லாம் 

மாறாத வடுவாய்  எம்  மனதுக்குள்ளே !

இத்தனை  ஆண்டுகள்  பொத்தி வளர்த்து 

பொல்லாங்கு நீக்கி ,பொறுப்பை உணர்த்தி 

இல்லாமை காட்டாமல் ,இருப்பதையெல்லாம்  கொடுத்து 

எள்ளளவும் தன்னலம் காட்டா 

உயர்ந்த உயிரே !-அளவுக்கதிகமாய் 

உங்களால் மட்டுமே   முடியும் 

ஆத்திரம் காட்டவும்,அன்பு காட்டவும்!

ஆறில் அன்பு காட்டி ,

பதினாறில் பண்பு சொல்லி ,

இருபதில் வாழ்க்கை கொடுத்து ,

முப்பதில் வாழ்வுக்கு வழி அமைத்து 

எனக்கு  நாற்பதாகும் போது 

உன்னை பாரமாய் நினைக்கும் என் 

இரக்கமற்ற மனதிற்கு முன் நின்று 

என்  பிள்ளைகளை கொஞ்ச துடிக்கும் 

மிக உயர்ந்த உறவே ! - அப்பா ,

ஆண்டவன் அனைவருக்கும் அருகில் இருப்பதில்லை -ஆனால் 

இருக்கிறான்!

அப்பா உருவில் அனைவரோடும் !







 






 



































  


1 comment:

  1. நண்பரே எனக்கு திருநெல்வேலி சொல் வரக்குடைய ஒலிப் பகுதி வேண்டும்

    ReplyDelete