பட்டாம் பூச்சி /வண்ணத்து பூச்சி
இந்த மலரில் எந்த உயிரினத்தின் வாழ்க்கையை பற்றி பார்க்க போகிறோம்
என்பதை படத்தை பார்த்தே தெரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா?
வாருங்கள் அழகான பட்டாம்பூச்சி பற்றி படிக்கலாம் !
ஒரு அழகான பட்டாம்பூச்சி முட்டையிலிருந்து நேரடியாக வருவதில்லை ,
முட்டையோடு சேர்த்து நான்கு நிலைகளை கடந்தே பாட்டாம்பூச்சியாய்
பறக்கிறது .
முதல் நிலை -முட்டை .
முதல் நிலையில் பெண் பட்டாம்பூச்சியானது மிக நெருக்கமாக இலையின் மேல் அல்லது மரப்பட்டையின் மேல் முட்டையிடும் .இந்த முட்டையானது ஐந்து நாட்களுக்கு பிறகு பொரிந்து லார்வா அல்லது கம்பளி பூச்சி என அழைக்கப்படும் புழுவாக பூமியில் பிறக்கும் .
இரண்டாவது நிலை -லார்வா
கம்பளி பூச்சி /லார்வா என அழைக்கப்படும் இந்த நிலையில் இவை அதிகமாக இலைகள் ,பூ போன்றவற்றை சாப்பிட்டு கொண்டே இருக்கும்.
இதன் முதல் உணவு அது பிறந்த இலையாகத்தான் இருக்கும் .
அதிக பசியுடையதாக இருக்கும் லார்வாநிறைய சாப்பிட்டு மிக வேகமாக பெரியதாகிவிடும்.லார்வா ஆனது இரண்டு /மூன்று முறை தோலை உரித்துவிடும் .இறுதியாக இந்த தோலை கொண்டு கூடு போல
ஒன்றை உருவாக்கி அதனுள் சென்று விடும் ,இந்த அமைப்பானது பூபா அல்லது கிர்சாலிஸ் என அழைக்கப்படும் .
மூன்றாம் நிலை-பூபா
இந்த நிலை முழுமையான ஓய்வு நிலையாகும் , இந்த தருணத்தில் கம்பளி புழு தன்னை பட்டாம்பூச்சியாக உருமாற்றி கொள்ளும்.இந்த கூடானது தன்னை மற்ற விலங்குகளிடமிருந்து காப்பாற்றி கொள்ள பெரும்பாலும் அது இருக்கின்ற இடத்திற்கு தகுந்தாற் போல நிறத்தில் இருக்கும் ,பட்டாம்பூச்சியாக தன்னை மாற்றி கொண்டு வெளிவரும்போது முழுமையாக வேறு மாதிரி இருக்கும்.
நான்காம் நிலை-பட்டாம்பூச்சி
மோனார்க் : பெயிண்ட்டட் லேடி :
ரெட் ஸ்பாட்டட் பர்ப்பில் பாக்கேயே
ஸீப்ரா லாங்விங்
பட்டாம்பூச்சிகளுக்கு குளிர் பிடிக்காது ,குளிரில் அவைகளால் பறக்க
முடியாதல்லவா ?,மேலும் தனது உடலில் ஈரத்தன்மையையை தக்க வைத்துக்
கொள்ளும் ,இவைகள் தனது கால்கள் வழியே சுவையை உணரும் தன்மை கொண்டவை .ஏறத்தாழ 15000,20000 வகையான பட்டாம்பூச்சிகள் உலகில் உள்ளது.நான்கு சிறகுகள் கொண்ட இவை பல வண்ண கலவையான சிறகுகளைக் கொண்டது .பேர்ட் விங் வண்ணத்துப்பூச்சிகள் பிகப்பெரியசிறகுகளைக் கொண்டு பறவைகள் போன்று பறக்கும் .பிள்ளைகளே அடுத்த இதழில் வேறு ஒரு உயிரினத்தை பற்றி பார்க்கலாம் .
நன்றி.
No comments:
Post a Comment