7/18/17

                         சிறு தானியங்களின் சிறப்புகள் -பிரதீபா பிரேம் 

இப்பொழுது சிறு தானியங்கள் என்பது நம் அனைவரின் செவிக்கும் பழகிய 
வார்த்தை ஆகி விட்டது ,நம்மில் பலர் இதனை சிறு வயதில் உண்டிருக்கலாம்,
பலருக்கு இது வெறும் செவி வழி உணவாக இருந்திருக்கலாம் ...எதுவாக இருப்பினும் இந்த கட்டுரை மூலம்   சிறு தானியங்களின் சிறப்புகளையும்
இதனை எவ்வாறு நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது என்பதையும் நாம் பார்ப்போம் .

பொதுவாக கம்பு,தினை ,வரகு ,கேழ்வரகு,மக்காச்சோளம் ,சோளம் ,குதிரை வாலி ,சாமை  போன்றவை சிறுதானியங்கள் என அழைக்கபடுகின்றது .
                                                                                                                   
                   

கம்பு:



Cumbu













அடங்கியுள்ள சத்துக்கள் : புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து . 

மருத்துவ பயன்கள்: உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது. மற்றும் வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.

 உணவுப் பதார்த்தம்: கம்பு களி, கம்பு சோறு, கம்பு புட்டு கம்பு நூடுல்ஸ், கம்பு பிஸ்கட்

 சோளம் :

Sorghum              
அடங்கியுள்ள சத்துக்கள்: புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், தயாமின், நயாசின், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து.


மருத்துவ பயன்கள்: நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றை குணப்படுத்துகிறது.


உணவுப் பதார்த்தம்: சோள சோறு, சோள களி, சோள அடை, சோள வடை, சோள பாயசம், சோள மால்ட்,சோள பிஸ்கட், ரொட்டி முதலியன தயாரிக்கப்படுகிறது.


 கேழ்வரகு:

Ragi    

அடங்கியுள்ள சத்துக்கள்: புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து பாஸ்பரஸ், இரும்புசத்து.


மருத்துவ பயன்கள்: சர்க்கரை நோய் மற்றும் ரத்தசோகை முதலியவற்றை குணப்படுத்துகிறது.


 உணவுப் பதார்த்தம்: கேழ்வரகு களி, கேழ்வரகு மால்ட், கேழ்வரகு புட்டு, கேழ்வரகு ரொட்டி முதலியன தயாரிக்கப்படுகிறது.

சாமை :


Panivaragu  

அடங்கியுள்ள சத்துக்கள்: புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, ஈரப்பதம், கொழுப்பு, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து.


மருத்துவ பயன்கள்: சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது. 


உணவுப் பதார்த்தம்: பணியாரம், சாமை சோறு, சாமை மால்ட், சாமை பிரியாணி, இணை உணவு குளூக்கோஸ் முதலியன தயாரிக்கப்படுகிறது.

 திணை:


தானியம்Tenai 



அடங்கியுள்ள சத்துக்கள்: ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் "பி', பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து.

மருத்துவ பயன்கள்: இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது. 
சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: முருக்கு, சீடை, ரொட்டி முதலியன தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

 வரகு :


தானியம்Varagu 





அடங்கியுள்ள சத்துக்கள்: தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து.

மருத்துவ பயன்கள்: சர்க்கரை அளவை குறைக்கிறது. மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.


உணவுப் பதார்த்தம்: முருக்கு, சீடை, வரகு சோறு, வரகு மால்ட் முதலியன தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

பனிவரகு :


Panivaragu      

அடங்கியுள்ள சத்துக்கள்: ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து.


மருத்துவ பயன்கள்: சர்க்கரை அளவினை குறைக்கிறது. 


உணவுப் பதார்த்தம்: முறுக்கு, சீடை, அதிரசம் முதலியன தயாரிக்க உதவுகிறது.



குதிரைவாலி :


கதிர்கள் தானியம்

 
அடங்கியுள்ள சத்துக்கள்: நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.


மருத்துவ பயன்கள்: உடலை சீராக வைக்க உதவுகிறது. சர்க்கரை அளவினை குறைக்க வல்லது ஆண்டி ஆக்ஸிடன்டாக  வேலை செய்கிறது. 


 உணவுப் பதார்த்தம்: இட்லி, தோசை, உப்புமா, கூழ் மற்றும் முருக்கு, சீடை, பக்கோடா முதலியன தயாரிக்கப்படுகிறது.


அடுத்த இதழில் இந்த உணவு வகைகளை எவ்வாறு செய்வது என்பதையும்
காணலாம் .....



No comments:

Post a Comment