எதிர் உயிர்ம மருந்துகளின்(ஆண்டிபயாடிக்) அவசியம் !
ஆண்டிபயாடிக் என அழைக்கப்படும் எதிர் உயிர்ம மருந்துகள் நம் உடலில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை அழிக்கக் கொடுக்கப்படுகின்றது, இவை உடலிலுள்ள பாக்டீரியாவை அழிக்கும் ,பாக்டீரியா ஆதிக்கம் வீரியமாக இருக்கும் போது அவற்றின் வளர்ச்சியை தடுக்கவாவது முற்படும் .வைரசினால் ஏற்படும் நோய்களுக்கு இது பயன்படாது.எதிர் உயிர்ம மருந்துகள் எப்போது ,எவ்வாறு கொடுக்கப்பட வேண்டும் ?
காது வலி ,மற்றும் நிமோனியா போன்ற நோய்களுக்கு மருத்துவரை அணுகும் போது பாக்டீரியாவின் தாக்கத்தை பொறுத்து
எதிர் உயிர்ம மருந்துகள் தரப்படுகின்றது.பொதுவாக இவை வாய்வழியாக கொடுக்கப்படும் மருந்து ஆகும் ,வாயினால் மருந்து எடுத்துக் கொள்ள முடியாதவருக்கு ஊசியின் மூலமாகவும் செலுத்தப்படுவதுண்டு.
மருத்துவர் கொடுக்கும் நாள்கெடு முழுவதும் இதனை எடுத்துக் கொள்வது மிக அவசியம் ,நோயின் தீவிரம் குறைகின்றது என எண்ணி மருந்தை பாதியில் நிறுத்துவதால் முழுமையாக பாக்டீரியாக்கள் அழிக்கப்படாமல் விரைவில் அதே பிரச்சனையயை உடல் சந்திக்க நேரிடும் .
மருத்துவரை அணுகாமல் காய்ச்சல்,இருமல் ,பூஞ்சான் தொற்று போன்ற
நோய்களுக்கு எதிர் உயிர்ம மருந்துகள் எடுத்துக் கொள்வது நோயின் தாக்கத்தை அதிகப்படுத்துவதுடன் இன்னும் பல புதிய உடல் நல கேட்டிற்கும் வழி வகுக்கும் , சரியான முறையில் இதனை எடுத்துக்கொள்ளாத போது உடலில் உள்ள பாக்டீரியா எதிர் உயிர்ம மருந்துகளுக்கு பழகிவிடும் ,அதனால் அதனை அழிப்பதற்கு இன்னும் மிக வீரியமான வேறு எதிர் உயிர்ம மருந்துகள் கொடுக்க வேண்டிய நிலைக்கு உடல் தள்ளப்படும்.
இயற்கை நமக்கு அளித்த எதிர் உயிர்ம மருந்துகள்
நமக்கு இயற்கை அளித்த பொருட்களிலேயே எதிர் உயிர்ம மருந்துகள் இருக்கிறது ,நாம் அன்றாடம் செய்யும் சமையலில் சேர்க்கும் பூண்டு,மஞ்சள்,
முட்டைகோஸ் ,தேன் ,தேங்காய் எண்ணெய் ,ஆப்பிள் சீடர் வினீகர் ,இஞ்சி, ஏலக்காய்,கருவேப்பிலை,வெந்தயம் போன்ற பல பொருட்கள் உடலில் எதிர்ப்புசக்தியை உருவாக்கி கிருமிகளுடன் போராடும் எதிர் உயிர்ம மருந்துகளாகும் .
எனவே பீட்சா ,பர்கர் போன்ற குப்பைகளை உடலுக்குள் கொட்டாமல் முடிந்தவரை நம்ம ஊர் சமையலை செய்து உடல் நலத்தை பேணுவோம் ,மேலும் உடல் நலத்தில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அந்த துறையில் சிறந்த மருத்துவரை அணுகி மருந்து பெறுவதுடன் அவற்றை முறையாக பயன்படுத்தி நலம் பெறுவோம்.
No comments:
Post a Comment