வணக்கம்!என்ன அழகான தமிழ் சொல் ,ஆனால் எனக்கு தெரிந்து நான் எத்தனை முறை இந்த சொல்லை பயன்படுத்தி இருக்கிறேன் என்றால் நான் அதற்காக இந்த தருணத்தில் வெட்கபடுகிறேன். ஆனால் நான் ரசித்து ,என்னை மறந்து படித்த தமிழை நீண்ட இடைவெளிக்கு பின் இந்த வலைத்தளம் மூலமாக என்னால் தீட்ட முடிகிறதென்றால் இந்த தருணத்தில் என்னை விட மகிழ்பவர்கள் யாரும் இருக்க முடியாது , என்ன தீட்டுதல் என்கிறீர்களா ஆமாம் என்னை பொறுத்த வரை தமிழ் ஒரு ஓவியம் ,எனது உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு கவிதையாக ,கதையாக வடிவம் கொடுக்கும் அழகான ஓவியம். உண்மை, என்னால் வேறு எந்த மொழியிலும் சுதந்திரமாக மனதுள் தோன்றும் வார்த்தைகளை கோர்க்க முடிவதில்லை,இதனில் எழுதும் போதுதான் தாயின் மடியில் படுத்து கொண்டு ,இனிய தென்றலை சுவாசித்து கொண்டே நிலவினை ரசிக்கும் சுகம் கிடைக்கிறது .இனி என் நினைவலைகளின் சாரலை பதிவு செய்கிறேன் . இந்த பக்கங்கள் சிறு கதைகளையும் கட்டுரைகளையும்,கவிதைகளையும் தங்கி இருப்பதாக இருக்கும். சில நிமிடங்கள் எனக்காக உங்கள் கடிகாரத்தின் முட்களை நகர அனுமதித்ததற்காக எனது நன்றிகள்.
No comments:
Post a Comment