கண்ணே எங்களுக்கல்லவா கால்கள் வலிக்கிறது - நீ
வேகமாய் நடக்கும்போது!
எங்கள் உடல் அல்லவா பதறுகிறது - நீ
எங்கேனும் இடித்து கொண்டு விடுவாயோ என !
நீ காயப்படும்போது மனம் வலிக்கிறது - நாங்கள்
காயப்பட்ட போது வலித்ததை விட அதிகமாகவே !
எழுந்து நிற்க ஆசை படுகிறாய் நீ - ஆனால்
விழுந்து விடுவாயோ என ஓசையில்லாமல் பதறுகிறோம் நாங்கள் !
உன்னை விட்டு உண்ணவும் மனம் மறுக்கிறது நாங்கள்
உண்பதை உன்னால் உண்ண முடியாது என்ற உண்மையை
உணர்ந்த பின்னரும் கூட !
என்ன இது சிறு பிள்ளைத்தனம் என்கிறாயா ?
ஆமாம், உன்னை பெற்றுடுத்து விட்டு நாங்கள்
ஆகிவிட்டோம் சிறுபிள்ளைகளாக!
hi prathibha,
ReplyDeleteyour blog is cool and your poems are very nice...i can easily identify myself in this particular poem...looking forward to see many more poems here...