பள்ளிக்கூடம்!
இந்த வாரம் முழுக்க தொலைபேசியில் என்னோட ஹாட் டாபிக்
"ஆமாம் வர்ற திங்கள் கிழமை தான் ஸ்கூல் ,அவகிட்ட ஸ்கூல் பத்தி எல்லாம் சொல்லிருக்கோம் ,பாப்பாவும் ஸ்கூல் போகணும் ,போகணும்னு சொல்லிட்டே இருக்கா " .என இதே புராணமாக பாடிக் கொண்டிருந்தேன் ,குட்டிம்மா வழக்கம் போல எதையோ ஆராய்ச்சி பண்ணிட்டு வந்து சமர்த்தா என் பக்கத்தில நின்னா ,அம்மா யாரு போன்ல ?என்றாள் "ப்ரியா ஆன்ட்டி மா... என்று சொல்லிவிட்டு, ஓகே பிரியா பசி வந்துட்டு போல பாப்பாக்கு நான் அப்புறம் பேசறேன் என இணைப்பை துண்டித்து விட்டு சமையலில் கவனமானேன் .
அம்மா என் வயிறு பசிக்குது சொல்லுதும்மா என்ற அந்த பிஞ்சு குழந்தையை வாரி அணைத்துக்கொண்டு இன்னும் 5 நிமிசம்தாண்டா கண்ணு என சாப்பாடு கொடுப்பதற்குள் காலையே கட்டிக்கொண்டு வந்தாள் குழந்தை .
பாப்பாவிற்கு பள்ளிக்கு கொடுக்க வேண்டியதெல்லாம் வாங்குவதிலேயே இந்த வாரஇறுதிநாட்கள் பறந்து போயிற்று,திங்கள் கிழமைக் காலை வேகமாக அவளை எழுப்பி ,பல்துலக்கி பாலைக்கொடுத்தேன் , உட்கார்ந்து கொண்டே தூங்க ஆரம்பித்த குழந்தையை பாவமாக பார்த்து விட்டு தொலைக்காட்சியில் அவளுக்கு பிடித்த பொம்மை படத்தை போட்டேன் ,ஒருவழியாக கிளப்பி விட்டு
இந்தியாவிற்கு பேச தொலைபேசியை எடுத்து 2 தாத்தா ,பாட்டியிடமும் ஆசிர்வாதம் வங்கி முடித்து, காரில்போய் அமர்ந்துக் கொண்டோம் .
இவளுடைய பள்ளியில் சொன்ன வழக்கப்படி முதல் நாள் விளையாட்டு மைதானத்தில் விட்டுவிட்டு வந்துவிடவேண்டும் என்பதால் உள்ளே சென்று விளையாடு பாப்பா என கூறி நின்றேன் ,எல்லா குழந்தையும் அம்மா,அப்பா போனவுடன் அழுவதை பார்க்கவே மனம் கசிந்தது.
ஆசிரியை வந்து " யு கேன் லீவ் வி வில் டேக் கேர் " என்றவுடன் மெதுவாக நகர தொடங்கினேன்,இதுவரை சமர்த்தாக நின்று கொண்டிருந்த பாப்பா காலைக் கட்டிக்கொண்டு அம்மா போகாத நானும் வரேன் என கதற ஆரம்பித்தாள் ,நானும் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு இல்லடா கண்ணா
பாரு எவ்ள பிரண்ட்ஸ் உனக்கு ஜாலியா விளையாடு தங்கம் என கூறுகையிலே என் குரலும் தளுதளுத்தது ,அவளை வலுக்கட்டாயமாக
விலக்கி விட்டு நகருகையிலே எனக்கும் அழுகை வெடித்தது ,ஓடி வந்து
காரில்ஏறிக்கொண்டு தேம்பி அழுத என்னை பார்த்துக் கொண்டே கதறிக் கொண்டிருந்தாள் குழந்தை.வீடு வந்தும் மனதில்லை, அம்மாக்கு பேசி அழ ஆரம்பித்துவிட்டேன் குழந்த ரொம்ப அலறாம்மா என.
அழுது முடித்தவுடன் அம்மா சொன்னாள் ,நீ முதல்ல பள்ளிக்கூடம் போனப்ப
உனக்கு ஐந்து வயசு ,அப்பவே நீ ரொம்ப அழுத ,பாரு இவ்வளவு வயசு ஆகியும் அழற அவளுக்கு இரண்டரை வயசுதான் அவ என்ன பண்ணுவா?.ஆடி ,ஓடி விளையாட வேண்டிய வயசு இது, இன்னும் கொஞ்ச வருஷம் ஆனா நீயே நினச்சா கூட அவ உன்கூட இருக்க மாட்டா ...,ஆனா என்ன பண்றது இப்ப உள்ள காலத்திற்கு நாமலும் மாறனுமே என ஆறுதல் கூறினாள் .
இப்போ மனது கொஞ்சம் லேசாக இருந்தது ,அம்மா சொன்னதின் அர்த்தம் எனக்கு புரியாமல் இல்லை ஆனாலும் மனது ரொம்பவே பாரமாக இருந்தது ,கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன் மணி பன்னிரண்டு
அடித்ததுபசி வந்திருக்குமே ,என்ன பண்ணுவாளோ ,அவசரமா இருந்தா சொல்லுவாளா? டயபர் வேற போடலையே என ஆயிரம் கேள்விகள் மண்டையைக் குடைந்தது . எனக்கு வீட்டில் நிற்க முடியவில்லை,வாங்க எப்ப வரீங்க ? என நான் செய்த தொல்லையில் அரைமணியில் வந்து சேர்ந்தார் கணவர் ,இருவருமாய் புறப்பட்டு பள்ளியில் கார்கள் நின்ற வரிசையில் சேர்ந்துக் கொண்டோம் ,எங்கள் என்னைப் பார்த்ததும் பாபாவைத் தூக்கி வந்தார்கள் ,அவர்களுடைய கட்டுபாடுகளெல்லாம் மறந்து கார் கதவைத்தி திறந்துக் கொண்டு ஓடிப் போய் பிள்ளையை கேட்டேன்,அந்த ஆசிரியையோ
அடித்ததுபசி வந்திருக்குமே ,என்ன பண்ணுவாளோ ,அவசரமா இருந்தா சொல்லுவாளா? டயபர் வேற போடலையே என ஆயிரம் கேள்விகள் மண்டையைக் குடைந்தது . எனக்கு வீட்டில் நிற்க முடியவில்லை,வாங்க எப்ப வரீங்க ? என நான் செய்த தொல்லையில் அரைமணியில் வந்து சேர்ந்தார் கணவர் ,இருவருமாய் புறப்பட்டு பள்ளியில் கார்கள் நின்ற வரிசையில் சேர்ந்துக் கொண்டோம் ,எங்கள் என்னைப் பார்த்ததும் பாபாவைத் தூக்கி வந்தார்கள் ,அவர்களுடைய கட்டுபாடுகளெல்லாம் மறந்து கார் கதவைத்தி திறந்துக் கொண்டு ஓடிப் போய் பிள்ளையை கேட்டேன்,அந்த ஆசிரியையோ
"ப்ளீஸ் வி வில் புட் ஹேர் இன் கார் சீட் " என கொடுக்க மறுத்து விட்டார் ,மனதிற்குள் கருவியபடியே வந்து சீட்டில் அமர்ந்துக் கொண்டேன்,குழந்தை அழுதுக் கொண்டே கட்டிக் கொண்டாள் ,எவ்ள சொல்லி கூட்டிட்டு வந்தேன் இறங்காத அவங்களே வருவாங்கன்னு ....போனியே என்ன ஆச்சு என அவர் கத்தியதெல்லாம் நாங்கள் கொஞ்சிக் கொண்டதில் எங்கள் காதில் ஏறவே இல்லை!
No comments:
Post a Comment