காற்றில் கரைந்த இசை.
"தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் ,உயிருக்கு நேர் ."
இந்தப் பாடல் வரிகளை படிக்கும்போதே நம் மனிதிற்குள் கரைந்திருந்த இப்பாடலின் இசை நம் உதடுகளின் வழியே பயணம் செய்கிறதா? இதுபோல் பல நூறு பாடல் இசைகளின் தலைவன், அவர் இசை போலவே காற்றோடு கரைந்து விட்டார் ,ஆம் நம் தமிழ் மண்ணின் மிகச் சிறந்த இசைத் தலைவனை இழந்து இசையோடு, தமிழும் தான் வாடிப் போய் கிடக்கின்றது.இத்தகைய மாமனிதனின் வாழ்க்கைப் பயணத்தை பற்றிய இக்கட்டுரையோடு நாமும் பயணிப்போம் வாருங்கள் !
விஸ்வநாதன் அவர்கள் , 1928 ஆம் ஆண்டு சூன் 24 ஆம் நாள் மனயங்கத் சுப்பிரமணியன் ,நாராயணிகுட்டி அவர்களுக்கு
மகனாய் கேரளாவின் எலபுள்ளி என்னும் ஊரில் பிறந்தார்,தனது நான்காம் வயதில் தந்தையை இழந்த விஸ்வநாதன் அவர்கள் கண்ணூரில் தனது
தாத்தா வீட்டில் வளர்ந்தார் , கண்ணூரில் உள்ள ஜூபிடர் திரையரங்கின் வெளியில் தின்பண்டங்களை விற்றுக் கொண்டே திரைப்படத்தின் பாடல்களை கேட்டு தனது இசை அறிவை ஆரம்பத்தில் வளர்த்துக் கொண்டார் .
கண்ணூரில் நீலகண்ட பாகவதரிடம் தனது ஆரம்ப கல்வியை பயின்ற விஸ்வநாதன் சிறுவயதில் ஆர்மோனியம் வாசிப்பதில் சிறந்து விளங்கினார் , அவரது வாசிப்பை கேட்டு வியந்த நீலகண்ட பாகவதர்
எம்.எஸ்.வி அவர்களின் 13 ஆம் வயதில் கண்ணூர் டவுன் ஹாலில் மூன்று மணி நேர ஆர்மோனியக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். 1940 ஆம் ஆண்டுகளில் ஜுபிடர் திரைஅரங்கில் ஆபீஸ் பாயாக 3 ரூபாய் ஊதியத்திற்கு
வேலைக்கு சேர்ந்தார் திரு .எம்.எஸ்.வி .பின்னர் இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.
உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள் . தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள் [4]. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள்.விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார்.
1963ம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் நாள் மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.மேலும் இசைப்பேரறிஞர் விருது,கலை மாமணி விருது ,முனைவர் பட்டங்கள் என்ற பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன .
தமிழ்த்திரைப்படத்துறையின் மெல்லிசைக்கு இலக்கணம் வகுத்தவர்கள் என்று வர்ணிக்கப்படும் விசுவநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்கள், இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, முதன்முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்தியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் என்கிறார் விஸ்வநாதனிடம் உதவியாளராக பணியாற்றிய ஜி.எஸ். மணி.மேற்கத்திய இசையில் அதிக வல்லமை பெற்ற விஸ்வநாதன், மேற்கத்திய இசையின் பல நுணுக்கங்களை தமிழ் சினிமா இசையமைப்பில் புகுத்தினார் என்றும் அவர் கூறுகிறார்.தனது இளமைக் காலத்தில், தான் முற்றிலும் விஸ்வநாதனின் இசையில் லயித்துப் போயிருந்ததாக கூறும் இசையமைப்பாளர் இளையராஜா, எம்.எஸ்.வி- கவிஞர் கண்ணதாசன் கூட்டணியானது பிரிக்க முடியாத அற்புதமான ஒன்று என்றும் வர்ணிக்கிறார்.
இத்தகைய சிறப்புகள் மிகுந்த எம்.எஸ்.வி சூன் மாதம் 24ஆம் நாளன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய பின்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சூலை 14 ஆம் நாள் மண்ணுலகை விட்டு மறைந்தார்.அவர் மறைந்தாலும் காற்றும் ,மனிதனும் இருக்கும் வரை அவரது இசை இப்புவியில் நிலைத்திருக்கும்.

No comments:
Post a Comment