கனவு
முத்தமெல்லாம் நீர்த் தெளித்து
மொற மொற என அதைக் கூட்டி
சார சரக்கும் சேலை கட்டி
வாசல் நிறைந்த கோலமிட்டு
முன் வாசல் முழுதும் அம்மா திறக்க !
ஐயோ !முன்பனி என் மூச்சை பிசைந்தது
அப்படியே போர்வையோடு உருண்டு
தள்ளி சென்று நானுறங்க,
பட பட ,படாரென பாத்திரங்கள் உருளுதங்கே
இத்தனை இம்சைகளா ?
இனிமையாய் நான் உறங்குகையில் !
அத்தனையும் பொறுத்தருளி
பொதி மூட்டை போல் உருண்டு கிடக்க
கத்தியைப் போல் கதிரவன் அவன் தன்
கரங்களால் என் முகத்தில் குத்த,
கழுதை வயதில் காலை விடிந்தும்
உருண்டு பிரளும் பெண்பிள்ளை
அடுத்தவன் வீட்டுக்குப் போய்
அதிகாலை இப்படியே தூங்கினா
ஆறே மாசத்துல மறுபடி
இங்கேயே வந்து நிப்பா அழகு மக!
ஐயகோ ! வாடைக் காற்றும்,
வந்தெழுப்பும் , ஆதவனையும் விட
அம்மா வாய் திறந்தாள்? அவ்வளவு தான் !
இப்படி எண்ணிக் கொண்டு விழுந்தடித்து
எழுந்து அமர்ந்து கண்ணை கசக்கினால்
என் கடிகாரமும் என்னை எழுப்பிற்று !
திக்கறியாமல் முன் வாசலையும்
முற்றத்தையும் தேடினேன் நான்
எல்லாம் கடந்து ஏழு வருடங்கள்
ஆனது என மறந்து ,
தூக்கம் கலையாமல் !!!!!!
முத்தமெல்லாம் நீர்த் தெளித்து
மொற மொற என அதைக் கூட்டி
சார சரக்கும் சேலை கட்டி
வாசல் நிறைந்த கோலமிட்டு
முன் வாசல் முழுதும் அம்மா திறக்க !
ஐயோ !முன்பனி என் மூச்சை பிசைந்தது
அப்படியே போர்வையோடு உருண்டு
தள்ளி சென்று நானுறங்க,
பட பட ,படாரென பாத்திரங்கள் உருளுதங்கே
இத்தனை இம்சைகளா ?
இனிமையாய் நான் உறங்குகையில் !
அத்தனையும் பொறுத்தருளி
பொதி மூட்டை போல் உருண்டு கிடக்க
கத்தியைப் போல் கதிரவன் அவன் தன்
கரங்களால் என் முகத்தில் குத்த,
கழுதை வயதில் காலை விடிந்தும்
உருண்டு பிரளும் பெண்பிள்ளை
அடுத்தவன் வீட்டுக்குப் போய்
அதிகாலை இப்படியே தூங்கினா
ஆறே மாசத்துல மறுபடி
இங்கேயே வந்து நிப்பா அழகு மக!
ஐயகோ ! வாடைக் காற்றும்,
வந்தெழுப்பும் , ஆதவனையும் விட
அம்மா வாய் திறந்தாள்? அவ்வளவு தான் !
இப்படி எண்ணிக் கொண்டு விழுந்தடித்து
எழுந்து அமர்ந்து கண்ணை கசக்கினால்
என் கடிகாரமும் என்னை எழுப்பிற்று !
திக்கறியாமல் முன் வாசலையும்
முற்றத்தையும் தேடினேன் நான்
எல்லாம் கடந்து ஏழு வருடங்கள்
ஆனது என மறந்து ,
தூக்கம் கலையாமல் !!!!!!
No comments:
Post a Comment