புதிதாய் பிறப்போம் புத்தாண்டில்
பூவாய் பிறந்திருப்போமாயின்
சில நாளில் உதிர்ந்திருப்போம்
மணம் வீசிய பெருமையிலே !
கார்மேகமாய் பிறந்திருப்போமாயின்
சில நொடியில் கரைந்திருப்போம்
மழை தந்த பெருமையிலே !
மரமாய் இருந்திருப்போமாயின்
சில காலத்தில் அழிந்திருப்போம்
நிழல் தந்த பெருமையிலே !
மனிதனாய் பிறந்து விட்டோமே
மண்ணோடு மட்கும் நாளுக்கு முன்
மாற்றங்கள் பல செய்வோமா ?
எளியவருக்கு இரங்குவோம்
கொடுமை கண்டு பொங்குவோம்
பொல்லாமயை பொசுக்குவோம்
பொறுமை தனை பழகுவோம் !
நம் மனதுக்குள் இருக்கும்
தீப்பிழம்பு -எரிக்கவேண்டும்
இல்லாமை
தீமை
கொடூரம்
வஞ்சகம்
பாவம் , பின் பிறக்க வேண்டும்
புத்தாண்டில் புதுமனிதர்களாய் !!!
No comments:
Post a Comment