கல்யாணமாம் கல்யாணம்!
இந்த வருடத்தின் மிகப் பிரசித்தி பெற்ற திருமணமாக ஏப்ரல் 29 ஆம் நாள் இளவரசர் வில்லியம் ,கேட்ஸ் மிடில்ட்டனின் திருமணம் நடந்து முடிந்தது.மறைந்த இளவரசி டயானா,சார்லஸ் ஆகியோரின் மகனான வில்லியமிற்கும், கேட் மிடில்ட்டனுக்கும் புராடஸ்டன்ட் முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் நடந்தது.நடந்து முடிந்த திருமணத்தால் மக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்பட்டது என்பது பரவலான கருத்தாக லண்டனில் பேசப்பட்டது ,அதெல்லாம் ஒருபுறம் இருக்க நமது இந்தியாவின் பழம் பெரும் திருமண முறைகளைப் பற்றி சிறிது பார்க்கலாம் வாருங்கள் !
நமது இந்தியாவின் பலப் பகுதிகளில் திருமணப் பந்தத்திற்கு
மாங்கல்யம் என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.அதே போல் திருமணத்திற்கான அடையாளமாக குங்குமம் ,மஞ்சள்,வாழை மரம் இவை எல்லாம் நமது தமிழகத்தின் வழக்கமாக உள்ளது .திருமணத்தின் போது நமது உறவினர்களெல்லாம் புதிதாக மனம் முடிப்பவர்களை வாழ்த்துவதும், திருமண வீட்டார் வாழ்த்தியவர்களுக்கு நல்ல உணவிட்டு வழி அனுப்புதலும் தொன்று தொட்டே நமது பண்பாடாக இருந்து வருகின்றது.இத்தகைய திருமணங்களை ஆடம்பரமில்லாமலும், வறியோருக்கு உணவிட்டு ஆசி பெற்றும் நடத்தும் வழக்கத்தை அத்திப் பூத்தார் போல் எவரேனும் ஆங்காங்கே செய்து கொண்டுதான் உள்ளனர்.
இத்தகையச் சிறப்பு பெற்ற திருமண பந்தத்தால் தோன்றும் இல்வாழ்க்கையைப் பற்றி வள்ளுவர் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார் .
"அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்பது தில்லாயி னன்று" .
அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும் ,அதுவும் மற்றவர் பழிக்கும் குற்றமில்லாமல் இருந்தால் மேலும் நன்மையாகும்.வள்ளுவரின் இந்த வாக்கை பின்பற்றி வாழ்ந்தாலே நம் வாழ்க்கை இனிமையானதாக இருக்குமல்லவா!

நமது ஒட்டு மொத்த இந்தியர்கள் ஆகட்டும் ,தமிழர்கள் ஆகட்டும் திருமண பந்தத்தை இன்றளவும் மிக உன்னதமான வாழ்க்கையின் அங்கமாகவே கருதுகின்றனர்.நம் நாட்டில் பல பிரிவைச் சார்ந்தவர்களும் ஐக்கியமாவதற்கு முன்பாகவே இருந்த இந்து மதத்தின் முறைப்படி 8 வகையான திருமண முறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது ,அவையாவன பிரம்மா திருமணம்,தைவா திருமணம்,அர்சா திருமணம்,பிரஜபத்திய திருமணம் ,காந்தர்வா திருமணம், அசுரா திருமணம் ,ராட்சச திருமணம்,பைசாச திருமணம் .
இதில் பிரம்மா திருமண முறையும்,பிரஜபத்திய முறையுமே இன்றளவும் பெரும்பான்மையாக நடைமுறையில் உள்ளது முதல் முறைப்படி மணமகன் வீட்டார் தனது மகனுக்கேற்ற பெண்ணை பெண் வீட்டாரின் குடும்ப பாரம்பரியத்தைக் கொண்டு தேர்ந்தெடுத்து பெண் கேட்பார்கள் ,பெண் வீட்டார் மணமகனின் கல்விதகுதிகளை ஆராய்ந்து தனது பெண்ணை கொடுக்க ஒத்துக் கொள்வர் . இரண்டாவது முறைப்படி பெண் வீட்டார் தனது பெண்ணுக்கேற்ற மணமகனைத் தேடி மணமுடிப்பார்..காந்தர்வ திருமணம் என்பது இன்றையக் காதல் திருமணம் என்றுக் கூறப்படும் வகையைச் சேர்ந்ததாகும்.இதனைத் தான் நமது சங்க இலக்கியங்கள் களவியல் என்றுக் கூறுகின்றது .எடுத்துக்காட்டாக தொல்காப்பியர் கூறும் களவியல் பண்பாட்டைக் காண்போம் ,
"ஒன்றே வேறே என்றிருபால் வயின்
ஒன்றி யுயர்ந்த பால தாணையின்
ஒத்தக் கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னாயினும் கடிவரை யின்றே"(களவியல் -௨)
திருமணத்திற்கு உரிய பருவம் எய்திய ஆணும் பெண்ணும் தாமே எதிர்ப்பட்டு
காதலித்து மணந்துக் கொண்டனர் ,இவ்வாறு மணப்பது அவரவர் விதியின் வழியே நிகழும் என்கின்றார் தொல்காப்பியர் .மற்றத் திருமண முறைகள் இன்றைய வாழ்க்கைச் சூழலுக்கு நமக்கு ஒவ்வாதவை ஆகும்.(நன்றி:வெட்டிங்.ஐலவ் இந்தியா.காம்)
நமது இந்தியாவின் பலப் பகுதிகளில் திருமணப் பந்தத்திற்கு
மாங்கல்யம் என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.அதே போல் திருமணத்திற்கான அடையாளமாக குங்குமம் ,மஞ்சள்,வாழை மரம் இவை எல்லாம் நமது தமிழகத்தின் வழக்கமாக உள்ளது .திருமணத்தின் போது நமது உறவினர்களெல்லாம் புதிதாக மனம் முடிப்பவர்களை வாழ்த்துவதும், திருமண வீட்டார் வாழ்த்தியவர்களுக்கு நல்ல உணவிட்டு வழி அனுப்புதலும் தொன்று தொட்டே நமது பண்பாடாக இருந்து வருகின்றது.இத்தகைய திருமணங்களை ஆடம்பரமில்லாமலும், வறியோருக்கு உணவிட்டு ஆசி பெற்றும் நடத்தும் வழக்கத்தை அத்திப் பூத்தார் போல் எவரேனும் ஆங்காங்கே செய்து கொண்டுதான் உள்ளனர்.
இத்தகையச் சிறப்பு பெற்ற திருமண பந்தத்தால் தோன்றும் இல்வாழ்க்கையைப் பற்றி வள்ளுவர் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார் .
"அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்பது தில்லாயி னன்று" .
அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும் ,அதுவும் மற்றவர் பழிக்கும் குற்றமில்லாமல் இருந்தால் மேலும் நன்மையாகும்.வள்ளுவரின் இந்த வாக்கை பின்பற்றி வாழ்ந்தாலே நம் வாழ்க்கை இனிமையானதாக இருக்குமல்லவா!
No comments:
Post a Comment