இது ஒரு குட்டி கதை 9 வருடங்களுக்கு முன்பு எழுதியது !! காலம் தன் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு தான் ஓடுகின்றது....
ஹலோ அம்மா !
அசந்துப் போய் அமர்ந்தேன்
அத்தானின் அலுவலக ஆயத்தம் முடித்து
தொலைபேசி எடுபதற்குள்
மெல்லியதோர் சிணுங்கல்
இன்றைய காலை முடிந்தது என
எட்டி பார்த்தேன்!
இல்லை அம்மா இளைப்பாறிக் கொள் - என
தலையனையை அணைத்தாள் குழந்தை
எண்களைத் தட்டினேன்!
ஹல்லோ ....
அம்மா நான்தான்
மீண்டும் ஹல்லோ.....
நான்தான்
சரியா கேட்கலடி அமெரிக்காலேர்ந்து ....
விட்டு விட்டு...
வைங்க திரும்ப கூப்பிடறேன் !
ஹலோ
ஹல்ல்லோஒ.......
ஏம்மா கேக்குதா?
அதற்குள் அம்மா என்றாள் பாப்பா
இதோ வரேண்டா கண்ணா
இப்போக் கேக்குதுடி சொல்லு என்றாள் அம்மா
நாளைக்குப் பேசறேன்மா என்றேன்
வழக்கம்போல !
ஹலோ அம்மா !
அசந்துப் போய் அமர்ந்தேன்
அத்தானின் அலுவலக ஆயத்தம் முடித்து
தொலைபேசி எடுபதற்குள்
மெல்லியதோர் சிணுங்கல்
இன்றைய காலை முடிந்தது என
எட்டி பார்த்தேன்!
இல்லை அம்மா இளைப்பாறிக் கொள் - என
தலையனையை அணைத்தாள் குழந்தை
எண்களைத் தட்டினேன்!
ஹல்லோ ....
அம்மா நான்தான்
மீண்டும் ஹல்லோ.....
நான்தான்
சரியா கேட்கலடி அமெரிக்காலேர்ந்து ....
அடக்க முடியா சிரிப்பு எனக்கு
கேட்குதா?விட்டு விட்டு...
வைங்க திரும்ப கூப்பிடறேன் !
ஹலோ
ஹல்ல்லோஒ.......
ஏம்மா கேக்குதா?
அதற்குள் அம்மா என்றாள் பாப்பா
இதோ வரேண்டா கண்ணா
இப்போக் கேக்குதுடி சொல்லு என்றாள் அம்மா
நாளைக்குப் பேசறேன்மா என்றேன்
வழக்கம்போல !
No comments:
Post a Comment