கொடுத்து வைத்த பிறவியடா நீ !
கவலை வருகிறதா? துடைத்தெறி,
கண்ணீர் வருகிறதா? சிரிக்கப் பழகு,
கோபம் வருகிறதா? குளிர்ந்து விடு ,
சிறிய வாழ்க்கை இது
சினம் கொள்ளும் நேரத்தை
சிந்திக்க செலவிடு ,
பயம் கொள்ளும் நேரத்தை
பக்திக்காக செலவிடு ,
வாழ்க்கை சிறியது வாழ்ந்து பார்!
அதிகமாய் பேசுகிறவனிடம்
அமைதியாய் இருந்து விடு.
அடக்கமாய் பேசுகிறவனிடம்
இணக்கமாய் நடந்துக் கொள்.
அறிவாய் பேசுகிறவனிடம்
ஆர்வமாய் கற்றுக் கொள்!
கோபங்கள் ,தாபங்கள்
குரோதம் ,பழி
கர்வம் ,கயமை
நீயாய் கற்றுக் கொண்டது .
சரி பார்த்துக் கொள்
சான்றோரின் சரித்திரத்தில்
சரியில்லை என தெரியும் போது
முடிந்து விடும் வாழ்க்கை!
எனவே ,
வானிலே ஓடும் மேகமாய் இராதே
கலைத்து விடும் காற்று!
நீரிலே தோன்றும் நீர்குமிழியாய் இராதே
முடிந்துவிடும் வாழ்க்கை !
நிலவாய் இரு,
வளரலாம் ,தேயலாம்.
சூரியனாய் இரு,
உதிக்கலாம் ,மறையலாம்.
செடியிலிருந்து உதிரும்
பூக்கள் அழுவதில்லை
இருந்தவரை மனம் வீசிய பெருமையிலே !
பூவாய் இருந்து விடு
பூவுலகை வென்றுவிடு-ஏனெனில்
நீ கொடுத்து வைத்த பிறவியடா !
No comments:
Post a Comment