அன்புள்ள அப்பா .
நெஞ்சுக்குள் உங்கள் நினைவுகள் பல
நீக்க முடியா நினைவுச் சருகுகளாய் !
முன்னே கால் பதிக்கும் அத்தனை அடியும்-மனதுக்குள்
உங்களோடு கைகோர்த்துக்கொண்டே!
ஐயிரண்டு மாதங்கள் கருவில் சுமக்கவில்லை -உங்கள்
மனதிலல்லவா சுமந்தீர் !
அழும் பொழுதெல்லாம் அரவணைத்தீர் !
விழும் பொழுதெல்லாம் மனம் துடித்தீர்!
கரம் பிடித்து உலகம் காட்டினீர்!-எனக்கு
சுரம் என்றால் தூக்கம் விரட்டினீர் !
பொய்யாய் தூங்குவேன்
நீங்கள் கொஞ்ச வேண்டுமென!
எனது உலகில்
ஆயிரம் திட்டினாலும் அடுத்த நொடி அணைப்பது
ஐயிரண்டு மாதங்கள் கருவில் சுமக்கவில்லை -உங்கள்
மனதிலல்லவா சுமந்தீர் !
அழும் பொழுதெல்லாம் அரவணைத்தீர் !
விழும் பொழுதெல்லாம் மனம் துடித்தீர்!
கரம் பிடித்து உலகம் காட்டினீர்!-எனக்கு
சுரம் என்றால் தூக்கம் விரட்டினீர் !
அகலாத ஆயிரம் நினைவுகள்!
பொய்யாய் தூங்குவேன்
நீங்கள் கொஞ்ச வேண்டுமென!
ஓடி ஒளிந்து கொள்வேன்
என்னை வாரி அணைக்க வேண்டுமென!-இடைவிடா
வேலையிலும் வாடாமல்
பள்ளிக்குக் கொண்டுவிடும்
உங்கள் பொறுமை,
உங்கள் பொறுமை,
எனக்கென வரும்போதுதான் தெரிகிறது
உங்கள் அருமை!
உங்களால் மட்டுமே முடியும்!,
உங்களால் மட்டுமே முடியும்!,
அப்பா அப்பா என ஆயிரம் முறை கூப்பிட்டாலும்
ம்... போட!
எனது உலகில்
நீங்கள் மட்டுமே!
பிரியும் பொழுதெல்லாம்
மனமில்லை பிரிவதற்கு
மனமில்லை பிரிவதற்கு
ஆனாலும் பிரிகிறேன் அசைபோட
அடிமனதில் ஆயிரம் நினைவுகள்
உள்ள நம்பிக்கையில்!
உள்ள நம்பிக்கையில்!
நித்தம் நித்தம் நினைத்துக் கொள்கிறேன்
அடுத்த பிறப்பு அவசியம் !
அதிலும் அப்பாவாக நீங்கள் வருவதாயிருந்தால்!
No comments:
Post a Comment