10/16/19

அப்துல் கலாம் என்னும் அறிய மனிதர் !


  1.           

           அப்துல் கலாம் என்னும் அறிய மனிதர் !

     அன்பினால் அகிலத்தை ஆளும் அதிசயமே -நீ
     அணுவைப் பிளக்கும் போது
      நாங்கள் அறியவில்லை -எங்கள்
     ஆழ்  மனதில்  அமரப் போவது நீ என்று.!!

      2020 இல் உன் பாரதத்தைக்  காண
      கனவு கண்டாயோ !
      காலன்  மிகவும் கல் நெஞ்சக் காரன்
      உன்னைக்  கணப் பொழுதில்
      கரைத்து விட்டான் காற்றோடு!

      அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை
      நீ விண்ணுலகிற்கு  போகும் முன்னே -  உன்னைப் போல்
      பல நூறு அப்துல் கலாம்களை
      உருவாக்கி விட்டாய் எனவும்!
      அவர்கள் உன் கனவை  நோக்கி
      ஓடிக் கொண்டிருகிறார்கள் எனவும்!

      உமக்கு கோபமே வராதாம்
      உம்மோடு பழகியவர் சொன்னார் !
      அந்த ஆண்டவனே -
      ஆத்திரத்தில் அண்டத்தையே
       ஆட வைக்கையில் -அடடா ...!!
       உம்மை மட்டும் எந்த
       சூத்திரத்தைக் கொண்டய்யா
      படைத்தான் அவன் ?!!!

       அதனால்தானோ  உன்னை
       ஆண்டவானுக்கும் மேல்  -நம்
       அன்னை தேசம் வணங்குகின்றது ?!!!
        உம் பூவுடளுக்குதானய்யா உறக்கம்
        உமக்குத்  தெரியுமா???-நீர்
        பூவுலகில் விதைத்த விதைகளெல்லாம்
        முளைக்க ஆரம்பித்து விட்டன
        அன்னை தேசத்தின்
       அதிசயப் புதல்வனே !
        அன்பின் ,அடக்கத்தின்
        ஆதிப் பொருளே !
         உமது கனவுகளை  இனி
        எமது கண்களில்  காணுவோம்  !
        உமது ஆசைகளை இனி
        எமது நெஞ்சத்தில் சுமப்போம் !
        உம்மைப் போல் பிற நலம் கருதி
        வாழ முற்படுவோம் !
         தாய் மண்ணே வணக்கம் !
       

         
       

     
   


     


 





No comments:

Post a Comment