முதுவேனிற் கால முகில்கள்
வணக்கம் வசந்தமலர் அன்பர்களே ! பனி காலம் நம்மை வாட்டி எடுக்கும் போதெல்லாம் நம் நினைவிலே வந்து நின்றுவிட்டு போன கோடைதான் இப்பொது நாம்மோடு உறவாடிக் கொண்டுள்ளது .இந்த வெய்யிலின் கத கதப்போடு நமது சங்ககாலக் கோடையை பற்றி பார்க்கலாம் வாருங்கள்!
சங்ககாலத்தில் கோடைக்காலம் என்பது முதுவேனிற் காலம் என வழங்கப்பட்டு வந்தது ,தொல்காப்பியர், காலத்தை பெரும்பொழுது என்றும் சிறுபொழுது என்றும் இரண்டாக வகைப்படுத்தி கூறியுள்ளார் ,இதனை
‘‘பெரும்பொழுதென்றா சிறுபொழுதென்றா
இரண்டு கூற்றத் தியம்பிய பொழுதே’’
என்று நம்பியகப்பொருள் நூற்பா மொழிகிறது
ஒரு ஆண்டுக்குப் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. இவை இரண்டிரண்டு மாதங்களாகப் பகுக்கப்பட்டு பெரும்பொழுது என்று சொல்லப்படும். அவையாவன , கார்காலம் ,கூதிர்க் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம் ,இளவேனிற்காலம்,முதுவேனிற்காலம் என ஆறு வகைப்படும் .சிறுபொழுது என்பது ஒரு நாளை ஆறு பிரிவுகளாகப் பிரித்துக் கணக்கிடப்படும் காலமாகும். இது வைகறை,விடியல்,நண்பகல்,எற்பாடு, (பிற்பகல்) ,மாலை,யாமம் (நள்ளிரவு),எனப் பிரிக்கப்படும்.
சித்திரை, வைகாசி - இளவேனில்
ஆனி, ஆடி - முதுவேனில்
ஆவணி, புரட்டாசி - கார்காலம்
ஐப்பசி, கார;த்திகை - கூதிர்காலம்
மார்கழி, தை - முன்பனிக்காலம்
மாசி, பங்குனி - பின்பனிக்காலம்
என அறுவகைப் பருவமாகப் பகுத்துக் கூறுகின்றனர்.
"நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே "
பொருள்:
நடுவு நிலைத் திணையாகிய பாலையாவது நண்பகற்பொழுது
வேனிர்க் காலத்தோடு புணர்ந்து நின்ற வழிக் கருதிய
நெறியை உடைத்து .
இத்தகைய இனிமையான முதுவேனிர்க் காலத்தில் நமது பழந்தமிழகமும்,தமிழர்களும் எவ்வாறெல்லாம் வாழ்ந்தனர் என்பதை நமது இலக்கியங்கள் நமக்கு பறை சாற்றுபவையாக இருந்து வருகின்றது .இந்த முதுவேனிர்க் கால முகில்கள் கார் முகில்கலாக பல சமயம் இருந்து நம்மை குளிர்விக்க வேண்டுமென்ற ஆசையுடன் இக்கட்டுரையை முடிக்கிறேன்.
No comments:
Post a Comment