மனிதம்
மனிதா!
ஆதியிலே நீ இருந்தக் காலம் நினைப்பாயோ ?
ஆறறிவும் ,ஐந்தறிவும் அங்கமாய் திரிந்ததென்ன !
ஆடு,மாடு, கோழிகளுடன் அடக்கமாய் வாழ்ந்ததென்ன !
பாதியிலே உனக்கு வந்த சோதனைதான் சாதி என்பேன் !
சாதி வந்த பிறகு நீயும்
சத்தியமாய் மனிதனல்ல !
சத்தியமாய் மனிதனல்ல !
உயர்ச் சாதி குருதி இங்கு
சிவப்பாய் இருக்குமெனில்
சிவப்பாய் இருக்குமெனில்
உன் சாதி அல்லானும்
செங்குருதி கொண்டவனே !-அதனை
செங்குருதி கொண்டவனே !-அதனை
வெட்டி பார்த்தே உமக்கு ஐயம் அகற்ற வேண்டி
பார் முழுதும் வெட்டியும் ,குத்தியும்
பற்பல பாதகங்கள் நடத்துகிறாய்!
சாதி என்று வந்துவிட்டால்
பிள்ளையும் பிணக்காகிறார் !
நீதியை நீ கொஞ்சமும் நினைந்தாயோ ?
கீழ்சாதியில் நீ பிறந்திருந்தால்
உன் கதியும் இதுதானே ?
புரிந்து நீயும் அமைதி கொள்!
மனிதனிடத்தில் அன்பு கொள்!
பகைவருக்கும் பரிவு காட்டு !
பணமிருந்தால் பகிர்ந்து கொடு !
மனம் மட்டுமே இருந்தால்
மகிழ்ந்து இரு, மரிக்கும் வரை !
பதவி படைத்தவனும்,பணம் படைத்தவனும் ,
கொண்டாடும் சாதி இது !
மனம் மட்டுமே படைத்த
இல்லாதவன் பார்ப்பதில்லை!
மனிதா!
மனிதம் மட்டுமே -உன்னை
மனிதனாய் வாழ விடும்!
மனிதனாய் நில் !
மாநிலத்தை வெல் !
பற்பல பாதகங்கள் நடத்துகிறாய்!
சாதி என்று வந்துவிட்டால்
பிள்ளையும் பிணக்காகிறார் !
நீதியை நீ கொஞ்சமும் நினைந்தாயோ ?
கீழ்சாதியில் நீ பிறந்திருந்தால்
உன் கதியும் இதுதானே ?
புரிந்து நீயும் அமைதி கொள்!
மனிதனிடத்தில் அன்பு கொள்!
பகைவருக்கும் பரிவு காட்டு !
பணமிருந்தால் பகிர்ந்து கொடு !
மனம் மட்டுமே இருந்தால்
மகிழ்ந்து இரு, மரிக்கும் வரை !
பதவி படைத்தவனும்,பணம் படைத்தவனும் ,
கொண்டாடும் சாதி இது !
மனம் மட்டுமே படைத்த
இல்லாதவன் பார்ப்பதில்லை!
மனிதா!
மனிதம் மட்டுமே -உன்னை
மனிதனாய் வாழ விடும்!
மனிதனாய் நில் !
மாநிலத்தை வெல் !
No comments:
Post a Comment