10/16/19

வீறு கொண்டு எழுந்து நிற்கும் தமிழா !

தரணிஎல்லாம் நோக்க  நின்றாய் !
தாய் மண்ணின் வீரத்தை மீட்க வந்தாய் !
திக்கெட்டும் தெறிக்க நிற்கும் தமிழா
தீக்கனல் திசை எரிக்க  வா   !

வீரத்தின் விளைநிலத்தில்
வீசி எறிந்த  விதை நீ !
வீறு கொண்டு எழுவாய் என 
வீணருக்கு தெரியவில்லை போலும் !
மாறு வேடம் பூண்ட மனிதக் களைகள் -அவர்கள் 
மாபெரும் தமிழர்  முன் 
மண்டியிடும்  நாள் அருகில்  !

வீறு கொண்டு எழுந்து நிற்கும் தமிழா !

தோள் கொடுக்க தோழர் உண்டு -இன்று 
அற வாள் எடுத்து வென்று வா நன்று !

சட்டமெல்லாம் சரித்திரத்திற்கு அப்பால் 
மட்டமான மனிதர் சிலர் செய்யும் 
மதி கெட்ட திட்டமெல்லாம் 
மாபெரும் மாநிலத்தின் மக்களிடம் இனி எதற்கு !

வீறு கொண்டு எழுந்து நிற்கும் தமிழா !

ஏறு தழுவி ஏற்றம் கண்ட நம்  கூட்டம் 
வீறு கொண்டு எழுந்ததிங்கே பாரீர் !
போரடித்து களம் நிறைத்த என் தமிழன் -இன்று 
போர்களத்தில் உழலுகின்றான் பாரீர் !

ஏறும் ,உழவும்  எங்கள் வாழ்க்கை
எதிர்த்து நிற்கும் கூட்டத்தை
வெல்வதே வேட்கை !

நாடு கடல் தாண்டி வந்த  தமிழர் நாங்கள்!
நாடி நின்ற போதுமிங்கே தமிழர் நாங்கள் !
வீரம் உண்டு! வேட்கை உண்டு !பகைவா
உன்னை வேரறுக்கும் போரைக் கொண்டோம் பகைவா !
வீழ்வதெங்கள் பழக்கமில்லை-உம்மை
வெல்லும் தூரம் தொலைவில் இல்லை  !



   

No comments:

Post a Comment