10/16/19

                       பாரதத்  தாயின் பிள்ளைகள் நாம் !


தாய் மண்ணே!

முக்கால் கடலையும் ஒரு கால் நிலத்தையும் கொண்டாய்


காலம் செய்த கோலம் தெரியுமா? உனக்கு ! -இன்று

தண்ணீரை  அடைத்து வைத்து

தகிடுதத்தம் ஆடுகின்றது   மாக்கள் கூட்டம் ...

தண்ணீரை தாரை வார்க்க

தாரை தாரையாய் கண்ணீர்  அங்கே !

ஊரெல்லாம் வெள்ளம் வந்து ஓராண்டு ஆகவில்லை ...

ஓடும் நீரை உருப்படி செய்ய ஒரு

 ஏரி , குளம் விடவும் இல்லை இங்கே !-இப்படியாய்

மாடியை கட்டி மண்ணாய் போன உன்  மக்கள் -அண்டை

மாநிலத்தோடு தண்ணீர் போராட்டம்

 செய்வதென்ன பெருங்கொடுமை!- அன்னையே

நீ பொங்கி வந்தால் என்ன செய்யும்

 தண்ணீர் அடைக்கும் கூட்டம் -இன்று

தராத தண்ணீர் என்றும் வேண்டாம் என்றால்

எங்கு செல்வர் மக்களைக்  காக்க ?

இமயம் முதல் குமாரி வரை

இருப்பதெல்லாம் உன் பிள்ளைகள்  !

அண்டை வீட்டாரெல்லாம்  இன்று

கூடி நின்று பார்க்கின்றனர் !...

சொந்த வீட்டுக்குள் உன் மக்களுக்கென்ன

பிரிவினைப்  போராட்டம் ?

ஒன்றுபட்டு பிரிவினை அகற்றி !

ஒற்றுமையால்  உயர்ந்து காட்டி

உன் பிள்ளைகள் நாங்களெல்லாம்

என்று சொல்லும் காலம் என்று ?

அமைதியாய்க்  காத்து நிற்கும் அன்னையே !

உன்னோடுக்  காத்து நிற்கும்

கயமையில்லாக் கூட்டம் இங்கே....

காலத்தின்  மேல் பழியைப்  போட்டு

கடந்து செல்கின்றோம்  நல்  வழி நோக்கி !!



No comments:

Post a Comment